அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் வேலைவாய்ப்பு (வைணவம்) தமிழ் ஆசிரியர் சம்பளம் ஏற்ற முறை ரூ.20,600-65,500 | ஆகம ஆசிரியர் சம்பளம் ஏற்ற முறை ரூ.20,600 -65,500 கடைசி தேதி 30-09-2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 31, 2023

அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் வேலைவாய்ப்பு (வைணவம்) தமிழ் ஆசிரியர் சம்பளம் ஏற்ற முறை ரூ.20,600-65,500 | ஆகம ஆசிரியர் சம்பளம் ஏற்ற முறை ரூ.20,600 -65,500 கடைசி தேதி 30-09-2023

அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் வேலைவாய்ப்பு (வைணவம்) தமிழ் ஆசிரியர் சம்பளம் ஏற்ற முறை ரூ.20,600-65,500 | ஆகம ஆசிரியர் சம்பளம் ஏற்ற முறை ரூ.20,600 -65,500  கடைசி தேதி 30-09-2023

அர்ச்சகர் பயிற்சி பள்ளி (வைணவம்) 

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி (வைணவம்) தொடங்குவதற்கு ஏதுவாக பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி பள்ளியில் கீழ்கண்ட பணியிடங்களில் நியமனம் பெற விரும்புபவர்கள் உரிய படிவத்தில் உரிய விவரங்களை முழுமையாக அளித்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

பணியிடம் 

தமிழ் ஆசிரியர்-1 

சம்பளம் ஏற்ற முறை ரூ.20,600-65,500 


தகுதிகள் 

1) தமிழில் முதுகலைப்பட்டம், மற்றும் B.T. or B.Ed பட்டம். 

2) ஏதேனும் மேனிலைப்பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். தத்துவம், சமயம் மற்றும் பண்பாட்டில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

ஆகம ஆசிரியர்-1 

சம்பளம் ஏற்ற முறை ரூ.20,600 -65,500 

தகுதிகள் 

1) ஏதேனும் ஒரு வேத ஆகம பாடசாலையில் (வைணவம்) ஆசிரியராக ஐந்தாண்டுகளுக்குக் குறையாமல் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது) இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு திருக்கோயிலில் ஐந்தாண்டுகளுக்குக் குறையாமல் முதுநிலை அர்ச்சகராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

2) வைணவ ஆகமத்தில், தற்போதுள்ள வேத, ஆகம பாடசாலையில், நான்கு ஆண்டு படிப்பிற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 
பொதுவான தகுதிகள் 

1. விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது நிறைவு செய்தவராகவும் 45 வயது நிறைவு செய்யாதவராகவும் இருக்க வேண்டும். 
2. விண்ணப்பதாரர் இந்து சமயத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும். 
3. தமிழ் ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் வைணவ சமய கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும் 
4. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.09.2023 பிற்பகல் 5.45 மணி வரை 
5. விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி : "உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல் - 637 001.' 
6. விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.namakkalanjaneyar.hrce.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
7. விண்ணப்ப கட்டணம் கிடையாது. வெ.ஆ.எண். 122/ செ.ம.தொ.அ/ நாமக்கல் /2023 நாள் : 30.08.2023 திருக்கோயில் இணையதள உதவி ஆணையர் / செயல் அலுவலர்

No comments:

Post a Comment