பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22-08-2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 21, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22-08-2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22-08-2023 

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம்:அருளுடைமை குறள் :243 அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். விளக்கம்: அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை. 

பழமொழி : 

Beter pay the cook than the doctor வைத்தியனுக்கு கொடுப்பதை விட வாணிகனுக்கு கொடு 

இரண்டொழுக்க பண்புகள் : 

 1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன். 

 2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன் 

பொன்மொழி : 
முடிந்தால் மற்றவர்களைக் காட்டிலும் அறிவாளியாய் இருங்கள்; ஆனால் அதை அவர்களிடம் சொல்லாதீர்கள். - செஸ்டர் பீல்டு 

 பொது அறிவு : 

 1. தமிழகத்தின் முதல் ரயில் நிலையம் எது? விடை: ராயபுரம், சென்னை 
 2. தெற்கின் கைலாஷ் என்பது? விடை: வெள்ளையங்கிரி மலை 

English words & meanings : 

spacecraft-a vehicle used for travelling in space. விண்வெளிக் கப்பல் firecracker-a loud, explosive firework; a banger.,பட்டாசுகள் 

ஆரோக்ய வாழ்வு : 

கடுகு - இருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதும், ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு. சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாக விளங்குவது கடுகு. 
ஆகஸ்ட்22 சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்[1].[2] இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது. கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது. 

நீதிக்கதை 
ஒரு மரத்தில நம்ம காக்கா வாழ்ந்துட்டு இருந்துச்சு. அது உணவுக்காக ரொம்ப தேடி அலைந்து கஷ்டப்பட்டு சாப்பிட்டு வந்தது. ஒரு நாள் அது ஒய்வு எடுக்க ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து இருந்தது. அப்போ அதோட தலைக்கு மேல ஒரு குட்டி செம்மறி ஆடு பறக்குற மாதிரி தெரிஞ்சிது. அட என்னடா இது அதிசயம் செம்மறி ஆடு பறக்குதேன்னு பாத்தா, அது ஒரு பெரிய கழுகு தூக்கிட்டு போகுதுஎன்னடா இது, நம்மளும் தான் நல்ல பறக்குறோம். நமக்கு ஏன் இந்த சிந்தனை வரல, நல்ல ஒரு மாசத்துக்கு வச்சி சாப்பிடலாம் போலயே என யோசித்து கொண்டே ஒரு வாரம் முழுக்க ஆடுகள் இருக்கும் இடத்தை தேடி அலைந்தது. ஒரு வழியாக ஒரு பெரிய ஆட்டு கூட்டத்தை வளர்க்கும் இடத்தை அடைந்தது காக்கா. பகலில் ஆடுகள் குறைவாக இருந்ததால், மாலை நேரம் வரட்டும் எல்லா ஆடுகளும் நன்றாக சாப்பிட்டு கொழுகொழுன்னு இருக்கும் என அங்கிருந்த மரத்திலேயே காவல் இருந்தது காக்கா. செம்மறி ஆடுகளும் மாலை நேரம் ஆனதும் அந்த இடத்திற்கு வந்தடைந்தன. இங்குதான் காக்கா பலமான யோசனை ஒன்றை போட்டதுசின்ன ஆட்டு குட்டிய தூக்கிட்டு போக வேண்டியது தான் என எண்ணியது காக்கா. அங்கதான் ட்விஸ்ட் இருக்கு, காக்காவால செம்மறி ஆடு மேல இருந்து வெளிய வர முடியல, இறக்கையை விரிச்சி பறந்து ட்ரை பண்ணி பார்த்தும் பறக்க முடியல. காக்காவோட கால்கள், செம்மறி ஆட்டின் கடினமான ரோமங்களில் மாட்டி கொண்டதுசெம்மறி ஆட்டின் மேல் இருந்த காகத்தால் சிறிதும் அசைய முடியவில்லை. யாரோ வருவதை உணர்ந்த காகம் இறக்கைகளை அசைக்காமல் இருந்தது. ஆடுகளின் கூடாரத்திற்கு வந்த உரிமையாளர், காகம் அசையாமல் இருந்ததை கண்டு அதன் அருகில் சென்றார். காகம் தன்னுடைய ஆட்டை கடிக்க முயற்சி செய்திருப்பதை பார்த்த அவர், காகத்தை காப்பாற்றி அதன் கால்களில் கயிறை கட்டி தனது குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தார். காக்கா மாட்டி கொண்டு பரிதவித்தது.ஆகையால் குழந்தைகளே, நமக்கு என்ன வருமோ அதை செய்துவிட்டால் அதுவே நமக்கு நன்மை பயக்கும். அதை விடுத்து, மற்றவர்கள் வாழ்க்கையை வாழ முயற்சிப்பதோ, அதில் நம்மால் முடியாத ஒன்றிற்கு பேராசை படுவதோ விபரீதத்தில் தான் முடியும். 
இன்றைய செய்திகள் 22.08. 2023 

*நெம்மேலியில் ரூ.4276 கோடியில் மூன்றாவது கடல் குடிநீர் திட்டம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 
* சந்திராயன்-2 இன் ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இயங்கி வருகிறது. இன்று சந்திராயன்- 3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மகிழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள். 
* ஜெய்சங்கர் உள்பட ஒன்பது பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்பு. *சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய அக்னிப்பான் ராக்கெட் விரைவில் விண்ணில் ஏவப்படுகிறது. 
 *உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்: பிரனோய் முதல் சுற்றில் வெற்றி. 
 *ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு - திலக் வர்மாவிற்கு இடம். 

 Today's Headlines 

 *Chief Minister's Third sea water project at Nemmeli of Rs.4276 crores CM M. K. Stalin laid the foundation stone. 
 * Chandrayaan-2's orbiter is orbiting around the Moon. Chandrayaan-3 made contact with the lander today. ISRO scientists are happy.
 * Nine people, including Jaishankar, accepted the post as members of the Rajya Sabha. 
 *The Agnipan rocket developed by students of IIT Chennai will be launched soon. 
 *World Badminton Championship: Prannoy won the first round. 
 *India's 17-man squad for Asia Cup announced - Tilak Verma is listed. Prepared by Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment