இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்கான
இலவச பயிற்சி வகுப்புகள்
ஆகஸ்ட் 31 இல் தொடக்கம்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின்
இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) தொடங்கவுள்ளன.
இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி
யிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் இரண்டாம்
நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்
பாளர் பணிக்கு 3,359 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான கல்வித் தகுதி 10 ஆம்
வகுப்பு தேர்ச்சி ஆகும்.
இந்தத் தேர்வுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம்
செப்டம்பர் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட ஆட்சி
யர் அலுவலக வளாகத்தில் 4 ஆவது தளத்தில் உள்ள மாவட்ட வேலை
வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும்
வட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கவுள்ளன.
இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வியாழன், வெள்ளி
ஆகிய 2 நாட்கள் பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையில் நடை
பெறவுள்ளது.
இலவச பயிற்சி வகுப்பில் சேர தங்களது பெயரை திருப்பூர் மாவட்ட
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152,
94990-55944 ஆகிய எண்களிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்க
லாம்.
No comments:
Post a Comment