மாவட்டம் தோறும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!!!
மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநிலக்
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின்
இணைச் செயல்முறைகள், சென்னை-06
ந.க.எண். 6519 / G3 / 2023, நாள். 24.08.2023
பொருள் : பள்ளிக் கல்வி மாநில மதிப்பீட்டு புலம்-மாவட்டம் தோறும் 6 முதல் 9
வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வை
நடத்துதல்-வழிகாட்டி நெறிமுறைகள் - சார்ந்து,
பார்வை : 1. பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் அவர்களின் கூட்டக்குறிப்பு நாள்:
28.06.2023
2. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் அவர்களின் கூட்டக்
குறிப்பு நாள்: 22.08.2023
3. G.O. (Ms) No.155, School Education (ERT) Department, dated 16.11.2021
தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான "மாநில மதிப்பீட்டுப்
புலம்" பார்வையில் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது
தொடர்பாக பார்வையில் காணும் கூட்டக்குறிப்புகளில் கூறப்பட்டுள்ளவாறு அனைத்து
அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை (Learning
Outcome / Competency Based Test) நடத்துதல் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டுள்ளன.
1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைப்பு - 1 இல்
உள்ளவாறு 29.08.2023 முதல் 01.09.2023 வரை படிப்படியாக 6 முதல் 9
ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவு / திறன் வழி
மதிப்பீட்டுத் தேர்வுகளை (Learning Outcome / Competency Based Test)
நடத்த வேண்டும்.
2. இந்த மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில
மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும்
இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.
3. இணைப்பு -1 இல் குறிப்பிட்டுள்ளவாறு, தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒரு
நாள் முன்பாக பிற்பகல் 2 மணி முதல் அடுத்த 23 மணி நேரத்துக்குள்
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம்
செய்திருக்க வேண்டும்.
4. வினாத்தாள்களைப் பதிவிறக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு
காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப்
பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
5. தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, பள்ளிக்கல்வித்துறையின்
சார்பில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள
அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப
வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.
6. ஒவ்வொரு கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் (Learning Outcome /
Competency Based Test) தேர்வும் 40 மணித்துளிகளில் நிறைவு செய்யத்தக்க
வகையில் 25 கொள்குறி வகை வினாக்களைக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண்ணைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு
மாணவருக்கும் தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி
அதற்கான விடைகளை அத்தாள்களிலேயே மாணவர்களைக் குறிப்பிடச்
செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில்
இணைப்பு -1 இல் குறிப்பிட்டுள்ள நாளன்று தவறாமல் நடத்த வேண்டும்.
No comments:
Post a Comment