மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்கு 730 நாட்கள் விடுமுறை மக்களவையில் மத்திய மந்திரி தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 10, 2023

மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்கு 730 நாட்கள் விடுமுறை மக்களவையில் மத்திய மந்திரி தகவல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்கு 730 நாட்கள் விடுமுறை மக்களவையில் மத்திய மந்திரி தகவல் நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில், மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கூறியதாவது:- சிவில் சர்வீசஸ் பணிகளில் நியமிக்கப்படும் பெண் ஊழியர்களும், மனைவியை இழந்த ஆண் ஊழியர்களும் தங்கள் மொத்த பணிக்காலத்தில் 2 மூத்த குழந்தைகளின் பராமரிப்புக்காக மொத்தம் 730 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள தகுதி பெற்றவர்கள் ஆவர். அக்குழந்தைகளின் 18 வயது வரை இந்த விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம். மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிக்க வயது வரம்பு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment