ஆதிதிராவிடர், பழங்குடியினர்
சென்னை ஐ.ஐ.டி.யில் சேர வாய்ப்பு
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுகழகம் தாட்கோ
சார்பில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்
குடியின மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. மூலம் தொழில்
பாதை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில்
முதல் முறையாக டேட்டா சயின்ஸ் மற்றும் மின்னணு அமைப்புகள்
பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதில் 12-ம் வகுப்பு அல்லது
அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பித்து
4 ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம். விண்ணப்பங்களை WWW.
tahdco.com என்ற இணையதளத்தில் அனுப்ப வேண்டும்.
மாணவர்களுக்கு தாட்கோ மூலம் கல்வி உதவித்தொகை வழங்
கப்படும். சென்னை ஐ.ஐ.டி. நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி
பெறுவதற்கு 4 வார பயிற்சி அளிக்கப்படும். இதில் கலந்து கொண்டு
தேர்ச்சி பெற்றால் படிப்பில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். படிப்பிற்
கான செலவுகளை தாட்கோ நிறுவனம் வழங்கும். இந்த தகவலை
ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment