தினம் ஒரு தகவல் : காலை உணவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 28, 2023

தினம் ஒரு தகவல் : காலை உணவு

தினம்ஒரு தகவல் காலை உணவு 

காலை உணவு மிக முக்கியம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர் கள். உடல்நலனில் காலை உணவு முதன்மையானது, ராஜா சாப்பி டுவதைப்போல அது இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். சிறப்பான ஊட்டச்சத்து மிகுந்தும் நிறைவாகவும் அந்த உணவு இருக்க வேண்டும். இரவு உணவுக்குப் பின் சுமார் 10 மணி நேரம் கழித்து மறுநாள் காலை 8 மணிக்குத்தான் காலை உணவைச் சாப்பிடுகிறோம்.இந்த நீண்ட விரதத்தைப் போக்குவதுதானே காலை உணவு. இந்த உணவைத் தவிர்த்துவிட்டால், அடுத்து 1 மணிக்குத் தான் மதிய உணவைச் சாப்பிடுவோம். அப்போது முழுமையான உணவைச் சாப்பிடாத இடைவெளி 15 மணி நேரமாகிவிடும். இப்படி இருந்தால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, ரத்தச்சோகை போன்ற உடல்நலக் கேடுகள் ஏற்படுவதற்கான சாத் தியம் அதிகம். இதுபோன்ற இடையூறுகள் அடிக்கடி வாழ்க்கையில் இடைப்படும். 

பசியோடு இருக்கும் குழந்தையால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாது.நினைவாற்றலுக்கு, மேம்பட்டகவனிப்புத்திறனுக்கு,நன்றாக பேசுவதற்கு, தனித்திறமைக்கு, சிறந்த முறையில் கல்வி கற்பதற்கு, பிரச்சினைகளுக்கு நல்ல முறையில் தீர்வுகாண்பதற்கு காலை உணவு அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலை உணவை தவிர்த்தால், வளரிளம் பெண்களுக்கு ரத்தசோகை போன்ற பிரச்சி னைகள் ஏற்படலாம். மாதவிடாய் காலத்தில் அதிகமானரத்தப்போக்கு ஏற்பட சாத்தியம் உள்ளது. 

திருமணமான பிறகு பிரசவ காலத்திலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம், பிரசவமும் சிக்கலாகலாம். உ காலையில் நாம் சாப்பிடும் உணவுதான் நாள் முழுக்க சுறுசுறுப்புட னும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட உதவுகிறது. நலமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு,நீண்ட ஆயுள் ஆகியவற்றுக்கு குழந்தைக ளுக்கு காலை உணவு அவசியம். இதையெல்லாம் உணர்ந்துகொண் டுதான் வயிற்றிலே ஈரமில்லாதவன் எப்படிப் படிப்பான்? ஏழைக் குழந் தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போட்டுப் படிக்க வைக்க வேண்டும்' என்று காமராஜர் அன்று நினைத்தார். 

செயல்படுத்தியும் காட்டினார். நலவாழ்வில் முக்கியப் பங்கை வகிக்கும் காலை உணவு, பள்ளி மாணவர்களின் உடல்நலனில் மட்டுமல்லாமல் அவர்களுடைய கல்வியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறிந்து, தமிழகத் தின் சில பகுதிகளில் பள்ளியிலேயே காலைச் சிற்றுண்டி வழங்கப்ப டுகிறது. இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் ஆரோக்கியம், கல்வித் தரத்தை உயர்த்தும் காலை உணவை அரசுப்பள்ளி மாண வர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருவது நல்ல விஷயம்.

No comments:

Post a Comment