B.E./ B.Tech., பொறியியல் பட்டப்படிப்பு மாணாக்கர் சேர்க்கைக்கான துணைக் கலந்தாய்வு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 28, 2023

B.E./ B.Tech., பொறியியல் பட்டப்படிப்பு மாணாக்கர் சேர்க்கைக்கான துணைக் கலந்தாய்வு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2023-24 தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை-25 (தமிழ்நாடு மாணாக்கர்களுக்கு மட்டும்) விளம்பர எண்.6000/TNEA/2023 

B.E./ B.Tech., பொறியியல் பட்டப்படிப்பு மாணாக்கர் சேர்க்கைக்கான துணைக் கலந்தாய்வு 


தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2023-24 பொதுக் கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, 12-ஆம் வகுப்பு பொது (Academic) மற்றும் தொழிற் கல்வி (Vocational) பயின்று சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த தமிழ்நாட்டைச் சார்ந்த மாணாக்கர்கள் மற்றும் 2023-பொதுக் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத மாணாக்கர்களும் கீழ்க்கண்ட இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். விண்ணப்பிக்கும் முறை: https://www.tneaonline.org or https://www.dte.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தல் வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள், தங்களின் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TNEA Facilitation Centers (TFCs) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் மேற்காணும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. Categories OC/BC/BCM/MBC & DNC Registation Fees Rs.500/- Rs.250/- SC/SCA/ST பதிவுக்கட்டணத்தை பற்று அட்டை, கடன் அட்டை மற்றும் இணையவழி வங்கி கணக்கு (Credit Card /Debt Card/ Net Banking / UPI) வழியாக செலுத்த வேண்டும். கேட்பு வரைவோலையாக (Demand Draft) செலுத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள், “The Secretary, TNEA” payable at Chennai, என்ற பெயரில் 28.08.2023 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ எடுக்கப்பட்ட வரைவோலையை அருகாமையில் இயங்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். கலைஞர் Ico 1924-2023 இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய தொடங்கும் நாள் 28.08.2023 03.09.2023 இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் மாணாக்கர்கள் இணையதளம் வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும் பொழுதே அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் (upload) செய்யவேண்டும். மேலும், இணையதளம் வாயிலாக சான்றிதழ் சரிபார்க்கும் பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி (TFCs) மையத்தினை தேர்வு செய்து கொள்ள வேண்டும். மேற்கண்ட அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் மட்டுமே அந்த குறிப்பிட்ட மாணாக்கரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பப்பட்டு, குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் TFC மையத்திற்கு நேரடியாக வந்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்காணும் இணையதளம் வாயிலாக மட்டுமே அறிந்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களை பெற தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்:1800-425-0110. Email: tneacare@gmail.com செ.ம.தொ.இ/985/வரைகலை/2023 செயலாளர் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை

No comments:

Post a Comment