திறன்களை மதிப்பீடு செய்ய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி கல்வித்துறை தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, August 11, 2023

திறன்களை மதிப்பீடு செய்ய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி கல்வித்துறை தகவல்

திறன்களை மதிப்பீடு செய்ய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி கல்வித்துறை தகவல்

அரசுப்பள்ளியில் 6 முதல் பிளஸ்2 வகுப்பு வரை படிக்கும் மாணவமாணவிகளின் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களின் திறனை அறிந்து கொள்ளும் வகையிலும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை ‘மாநில மதிப்பீட்டு புலம்' என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, 6 முதல் பிளஸ்2 வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களின் திறன் சார்ந்த மதிப்பீட்டை அறிந்து கொள்ள வினாடிவினா போட்டியை நடத்த ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்து உள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இந்த கணினி வழியிலான வினாடிவினா போட்டியை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. வருகிற 16ந்தேதி (புதன்கிழமை) முதல் வருகிற 29ந்தேதி வரை ஒவ்வொரு வகுப்பு மாணவமாணவிகளுக்கும் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதற்கான வழிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. அந்தவகையில், வினாத்தாளை உருவாக்கும் நிகழ்வு வினாடிவினா மதிப்பீடு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே முடிக்கப்படவேண்டும் என்றும், அந்தந்த வகுப்பாசிரியர் மட்டுமே வினாத்தாள் உருவாக்கும் நிகழ்வை மேற்கொள்ளவேண்டும் என்றும், வினாடிவினா மதிப்பீடு முடிந்தபிறகு விடைத்தாளை பதிவிறக்கம் செய்து வகுப்பில் மாணவர்களுடன் விவாதிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment