அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மீண்டும் வாய்ப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 17, 2023

அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மீண்டும் வாய்ப்பு

அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மீண்டும் வாய்ப்பு 21-ந்தேதி முதல் நேரடி மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடத்தப்பட்டன. பல்வேறு பாடப்பிரிவுகளில் உள்ள ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்ட நிலையில், இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பிவிட்டன. 98 கல்லூரிகளில் 9 ஆயிரத்து 820 இடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் இருக்கின்றன. அந்த இடங்களை நிரப்புவதற்கும் உயர்கல்வித்துறை முடிவு செய்து, வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் நேரடி மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளது. நிரப்பப்படாமல் உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் பார்த்து, மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சேர்ந்து கொள்ளலாம் என உயர்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இதேபோல், 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 24 ஆயிரத்து 342 முதுகலை பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு சேருவதற்கு www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. அதன்படி விண்ணப்பப்பதிவு கடந்த 14-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 22-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்த நிலையில், சென்னை பல்கலைக்கழக இளங்கலை பாடப்பிரிவுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால், முதுகலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி வரை நீட்டித்து உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment