ராணுவ பள்ளியில் ஆசிரியர் பணி - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 19, 2023

ராணுவ பள்ளியில் ஆசிரியர் பணி

ராணுவ பள்ளியில் ஆசிரியர் பணி 

ராணுவ நலன் கல்வி சங்கம் (ஏ.டபிள்யூ.இ.எஸ்.) மூலம் ராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 458 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பி.இ., பி.டெக்., எம்.எஸ்.சி. எம்.சி.ஏ., போன்ற முதுகலைப்பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 40 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தால் பணி அனுபவம் தேவையில்லை. 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் வயதுக்கு ஏற்ப பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூரில் தேர்வு மையம் அமைக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-9-2023. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கும் விண்ணப்பிப்பதற்கும் https://www.awesindia.com/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.


No comments:

Post a Comment