முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நிலையான வழிகாட்டி செயல்முறை - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 24, 2023

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நிலையான வழிகாட்டி செயல்முறை

நிலையான வழிகாட்டி செயல்முறை முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

 (CMBFS) மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - சட்டமன்ற 110 விதியின் கீழ் - ஆரம்பப் பள்ளி (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவை வழங்குதல் - கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் காலை உணவை சமைக்க PLF / ALF / SHG ஆகியவற்றின் சேவைகளை பயன்படுத்துதல் - தொடர்பாக.. கடிதம் எண்.7466/SW4-1/2022-3, தேதி 03.06.2022. கூடுதல் தலைமைச் செயலாளர், நிதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள் நாள்.03.06.2022. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆய்வுக் கூட்டம் நாள்.16.06.2022 மாண்புமிகு முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் அவர்களின் கூட்ட அறிவுரைகள் நாள்.28.06.2022 சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் G.O.No.43, நாள் 27.07.2022. 2023-24க்கான சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு நாள் 20.03.2023 மாநில அளவிலான அலுவலர்களின் கலந்தாய்வு கூட்ட நாள் 17.04.2023 மற்றும் 19.04.2023. ***w 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 6 மே 2022 அன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஆரோக்கியமான வருங்காலக் சந்ததியினரை உருவாக்குவதற்காக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் முதற் கட்டமாக கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தொடங்கப்பட்டுள்ளது. சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் முதற்கட்டமாக 16 மாவட்டங்களில் (17 தொகுதிகள், 346 கிராம ஊராட்சிகள் மற்றும் 963 பள்ளி மையங்கள்) அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளில் (346) முதன்மைக் குழுவால் தேர்வுசெய்யப்பட்டுள்ள சுய உதவிக்குழுக்கள்/ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு/ பகுதி அளவிலான கூட்டமைப்புகளைச் சார்ந்த உறுப்பினர்களின் சேவைகளைப் பயன்படுத்தி தற்போதுள்ள மதிய உணவு திட்ட சமையல் கூடங்களில் இக்காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 27.07.2022 அன்று வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணையின்படி பார்வை 5ல் காணும் இணைப்பு-| & II-ல் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாகக் கடைப்பிடிப்பதுடன் நிலையான வழிகாட்டி செயல்முறைகளை பின்பற்றி இணைப்பு-II இல் பட்டியலிடப்பட்டுள்ள உணவு இத்திட்டம் செயல்படும் கிராமப்புற பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கிடவும், இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment