இயற்கை காக்க, தவிர்க்க வேண்டிய உணவுகள்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 19, 2023

இயற்கை காக்க, தவிர்க்க வேண்டிய உணவுகள்!

இயற்கை காக்க, தவிர்க்க வேண்டிய உணவுகள்! 

இன்றைய நீர் தட்டுப்பாட்டில் சில உணவுகளைத் தவிர்த்தால் பஞ்ச சூழலை சிறிதேனும் ஒத்திவைக்க முடியும். அந்த உணவுகள் பட்டியல் இதோ! 100 கிராம் சாக்லேட் தயாரிக்க 2 ஆயிரம் லிட்டர் நீர் தேவை. இதற்கு செலவாகும் நீரைக்கொண்டு 20 ஆப்பிள்கள், 50 கிண்ணங்களில் ஸ்ட்ராபெர்ரிகளையும் விளைவித்துப் பெறலாம். 1 கிலோ மாட்டிறைச்சிக்கு, 15 ஆயிரம் லிட்டர் நீர் தேவை. இதற்கு மாற்றாக புரதம் செறிந்த பருப்புகளை பயன்படுத்தலாம். கோழிக்கு 3 மடங்கு நீரும், கோதுமைக்கு 8 மடங்கு நீரும் அவசியம். அமெரிக்காவின் பிரபலமான கலிபோர்னியா பாதாம் பருப்புகளை விளைவிக்க அந்த மாநிலத்தின் நீர்வளத்தில் 10 சதவிகிதம் செலவாகிறது. முந்திரி, பாதாம், ஹஸல் பருப்பு, பிஸ்தா உள்ளிட்டவையும் பல லிட்டர் நீரை உறிஞ்சுபவையே. ஒரு காபிச் செடிக்கு 550 கப்கள் நீர் தேவை. தேயிலைக்கு நிலம் தேவையெனில் காபிச்செடி லிட்டர் கணக்கில் நீர் குடிப்பவை. ஜாதிக்காய்க்கு 35 லிட்டர், வெனிலாவுக்கு 2 மடங்கு நீர்தேவை.

No comments:

Post a Comment