முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நூற்றாண்டு விழா கொண்டாட்டப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 24, 2023

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நூற்றாண்டு விழா கொண்டாட்டப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நூற்றாண்டு விழா கொண்டாட்டப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06. ந.க.எண்.045441/எம்/இ1/2023, நாள்.23.08.2023. விழா பள்ளி பொருள்: பள்ளிக் கல்வித் துறை - முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்துதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு. பார்வை: 1. அரசுக் கடிதம் ந.க.எண்.6688/ப.செ-2/2023-6, நாள்.21.08.2023. 2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 019528/எம்/இ1/2022, நாள்.26.07.2023. 

2023-2024 ஆம் கல்வியாண்டில் பள்ளி அளவிலான மன்ற செயல்பாடுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து வட்டார, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துவது சார்ந்து அறிவுரைகள் பார்வை (2) இல் கண்டுள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பள்ளி இலக்கிய மன்ற நிகழ்வுகளில் சிறப்பாக பங்காற்றி வட்டார அளவிலான போட்டிகளுக்கு ஜுன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளுக்கு பகுத்தறிவு. சீர்திருத்தச் செம்மல் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சமூக சீர்த்திருத்தங்களின் அடிப்படையிலான பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இவ்விவரத்தினை தலைமை ஆசிரியர்கள் வழியே வட்டார அளவிலான போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

எதிர்வரும் 30.08.2023 மற்றும் 31.08.2023 ஆகிய நாட்களில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வட்டார அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகளை நடத்திட தெரிவிக்கப்படுகிறது. மேலும், 10.11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேற்கண்டுள்ள தலைப்புகளில் தனிப்பிரிவாக பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை வட்டார அளவில் நடத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. வட்டார அளவிலான பிற மன்ற செயல்பாடுகளுக்கான போட்டிகள் குறித்த விவரம் தனியே அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment