நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 17, 2023

நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்

செய்தி வெளியீடு எண் 1679 நாள்: 17.08.2023 செய்தி வெளியீடு 

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" விழிப்புணர்வு நிகழ்ச்சி 

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 310 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023-2024 ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர்க்கை 31.08.2023 நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் 54 பொறியியல் தொழிற்பிரிவுகளிலும், 25 பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. வனு பெண்களிடையே தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இன்று 17.08.2023 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கிண்டி, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" என்ற நிகழ்ச்சியை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன் அவர்கள் துவக்கி வைத்தார். மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.2877.43 கோடி செலவில் ரோபோட்டிக்ஸ், அட்வான்ஸ்டு சி.என்.சி, மெக்கானிக் மின்சார வாகனங்கள் போன்ற தொழில் 4.0 தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தியுள்ளது. இத்தகைய உலகத் தரம் வாய்ந்த முன்னோடி பயிற்சிகளை பெற்று தங்களது திறனை உயர்த்தி அதிக ஊதியம் பெறும் வேலைவாய்புகளை மாணவிகள் பெறலாம். இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திரு. கொ. வீரராகவ ராவ் இ.ஆ.ப, ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் நிலைய மேலாண்மைக் குழுத் தலைவர்கள் திரு. டி. வல்லபன், திருமதி. வி. ரேணுகா, திருமதி. கே. கவிதா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு தொழிற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்கள். ஆணையர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 அரசின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள: tndiprnews. Indipr o tndipr TN DIPR www.dipr.tn.gov.in

No comments:

Post a Comment