காரில் துரு பிடிக்க முக்கிய காரணங்களில் ஒன்று உப்பு தண்ணீர். சில இடங்களில் காரை கழுவ உப்பு தண்ணீர் மட்டுமே உபயோகிக்கும்பட்சத்தில் கழுவியதும் காரில் எங்கும் தண்ணீர் இல்லாதவாறு சுத்தமாக துடைத்து எடுத்துவிட வேண்டும்.
உப்பு தண்ணீரில் அடிக்கடி கார் கழுவுவதைத் தவிர்த்து நல்ல தண்ணீரில் வெறுமனே துடைத்து வந்தால்கூட போதும். துரு பிடிப்பதைத் தவிர்க்க முடியும்.
சக்கரம் அமைந்துள்ள உள்பகுதிகளில் அதிகமாக மண் மற்றும் சேறு தங்கிவிட வாய்ப்புகள் உள்ளன. இதனால் அங்கு துரு பிடிக்க தொடங்கிவிடும். ஆகவே இப்பகுதிகளில் மண், சேறு தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
காரின் உள்ளே பயன்படுத்தும் மேட்டில் அதிகமாக மண் மற்றும் தண்ணீர் தேங்க விடாமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், ஏனென்றால் மண் மற்றும் தண்ணீர் தொடர்ந்து தங்கும் பட்சத்தில் அங்கே துருப்பிடிக்க தொடங்கி விடும்.
மழைக்காலத்தில் தண்ணீர் அதிகமாக உள்ள பகுதியில் காரை தொடர்ந்து ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கக்கூடாது, அப்படி நிறுத்தினால் பிரேக் சிஸ்டத்தில் உள்ள கேரியர் பிளேட் எளிதாக துரு பிடிக்க தொடங்கி விடும்.
காரின் அடிப்பகுதியில் மண் மற்றும் சேறு அதிகமாக சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கார்களுக்கு வருடம் ஒரு முறை ஆன்டி ரஸ்ட் கோட்டிங் அடிப்பது நல்லது. அது, காரை துரு பிடிப்பதில் இருந்து பாதுகாக்க உதவும்.
One of the main causes of car rust is salt water. In some places, if only salt water is used to wash the car, after washing, the car should be wiped clean so that there is no water anywhere.
Avoid frequent car washes in salt water and simply wipe with clean water. Rust can be avoided. The internal areas where the wheel is located are more likely to accumulate mud and mud. Due to this, rust will start there. Therefore, care should be taken to prevent soil and mud from settling in these areas.
The mat used in the interior of the car should be cleaned regularly to avoid excessive accumulation of mud and water, because if the mud and water remain there, it will start to rust. During rainy season, the car should not be parked continuously in the same place where there is a lot of water.
Care should be taken not to collect too much mud and mud on the bottom of the car. Anti-rust coating is good for cars once a year. It helps protect the car from rusting.
No comments:
Post a Comment