நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 2 ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 28, 2023

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 2 ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 2 ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர்  வாழ்த்து 

மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ள தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். அந்த ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ‘டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 
தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம்!. இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment