தோல்வியில் பாடம் கற்பது எப்படி? - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, August 29, 2023

தோல்வியில் பாடம் கற்பது எப்படி?

தோல்வியில் பாடம் கற்பது எப்படி? 

ரோஜா செடி முள்ளைக் கொண்டுள்ளது என்று குறை சொல்லவும் முடியும், முள்செடி அழகிய ரோஜாப்பூவைக் கொண்டுள்ளது என்று சந்தோஷப்படவும் முடியும். சந்தோஷமும் குறையும் நம் பார்வையைப் பொருத்ததே...! அந்தப் பார்வை நம் நம்பிக்கையைச் சார்ந்து இருக்கிறது. 

1970-களின் இறுதியில் மார்க்ரெட் மாட்லின், டேவிட் ஸ்டாங் உள்ளிட்ட உளவியலாளர்கள் தங்கள் ஆராய்ச்சியின் மூலம், நல்ல நம்பிக்கை பற்றிய இந்தக் குறையான பார்வையை மாற்றி அமைத்தனர். தோல்விகளும் பின்னடைவுகளும் சறுக்கல்களும் இல்லாத வாழ்க்கையே கிடையாது. தோல்விகளில் துவளாமல் இருக்கவும், பின்னடைவுகளில் பின்தங்காமல் இருக்கவும், சறுக்கல்களில் 

சுணங்கிப் போகாமல் இருக்கவும் இந்தத் தளரா நம்பிக்கை மிகவும் அவசியம். இந்த நம்பிக்கையானது பிரச்சினைகளை நேருக்குநேர் சந்தித்து அதைத்தீர்க்கும் தெளிவான பார்வையை நமக்கு அளிக்கிறது. அது மட்டுமின்றி இந்த நம்பிக்கையானது பின்னடைவுகளில் உள்ள நல்லவற்றை மட்டும் பார்க்கும் திறனை நமக்கு அளிக்கிறது. 

 சின்ன சின்ன விஷயங்களுக்கும் சந்தோஷப்பட்டு, அதைத்தந்த வாழ்க்கைக்கு நன்றி சொல்லுதல், உதவி தேவைப்படுபவர்களுக்கு தாமாக முன்வந்து உதவுதல், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது, நம்பிக்கையுள்ள மனிதர்களுடன் நேரம் செலவழித்தல், கடந்துபோன நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் அதே வேளையில், அதை நினைத்து வருந்துவதைத் தவிர்த்தல், ஒவ்வொரு நாளையும் புதிதாக அணுகுதல். நிரந்தரமில்லை என்பதே நம் வாழ்வில் நிரந்தரம். எந்த இன்னலும் பிரச்சினையும் தோல்வியும் நம்முடன் நிரந்தரமாகத் தங்கப்போவதில்லை. 

எனவே தோல்வியின்போது துவளவும் வேண்டாம், வெற்றியின் போது அளவுக்கு அதிகமாகத் தலைக்கனம் கொண்டு துள்ளவும் வேண்டாம். விக்டர் ஹியூகோ, தன் புகழ்பெற்ற லே மிசரபிள் என்ற புத்தகத்தில் சொல்வதுபோல் 'மிகவும் இருண்ட இரவு முடிந்து, சூரியன் கண்டிப்பாக உதித்தே தீரும்' என்பதே நல்ல நம்பிக்கையின் வௌிப்பாடு.

How to learn a lesson from failure? 

 Reducing the emphasis on the thorn in a rose and instead focusing on its beauty is possible. Finding joy in having a beautiful rose with thorns is also achievable. Joy and sorrow determine our perspective...! That perspective influences our faith. In the late 1970s, through their research, physicists like Mark Kac and David Stauffer altered their pessimistic view about good faith. 

A life without failures and setbacks is unattainable. In failures, maintaining composure is essential; in successes, not becoming overly excited is important; in difficulties... Preserving undiminished hope amidst difficulties is absolutely necessary. This steadfast faith helps us confront challenges head-on and find a clear perspective to overcome them. Beyond this, such unwavering hope grants us the ability to discern positive aspects within successes. Expressing gratitude for even the smallest blessings, offering help to those in need, extracting wisdom from reading, connecting with hopeful individuals, learning from past events, and reflecting upon it, all contribute to growing and embracing each new day afresh. Consistency is not guaranteed; that's the constancy in our lives. 

No matter what troubles or failures, they won't persist with us indefinitely. Therefore, during hardships, we shouldn't feel excessively disheartened, and in times of success, we shouldn't let pride cloud our judgment. As Victor Hugo wrote in his acclaimed novel "Les Misérables," just as the darkest night gives way to the rising sun, strong faith persists, 'After having been very miserable night, the sun will rise.'

No comments:

Post a Comment