பார்வை 2-இல் கண்டுள்ள அரசாணையின்படி தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு
ஆணையத்தின் கீழ். பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் வாயிலாக முற்றிலும்
தன்னார்வல முறையில் செயல்படுத்தப்படும் " புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022 27", என்ற
ஐந்தாண்டு வயது வந்தோர் கல்வித் திட்டத்தை 2023-24 ஆம் ஆண்டில் அனைத்து
மாவட்டங்களிலும் செயல்படுத்துவது சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் பார்வை 3-இல் காண்
இவ்வியக்கக செயல்முறையின் வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி
அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கற்போர் மற்றும் தன்னார்வலர்களைக் கண்டறியும் செயல்பாடுகள்
2023 ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி 2023 ஜூலை நான்காவது வாரத்தில் முடிக்கப்பட்டு
அனைத்து மாவட்டங்களிலும் கற்போர் எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கற்போர் எழுத்தறிவு மையங்கள் 01.092023 முதல் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி
சிறப்பாக செயல்படுத்திடும் வகையில், மாவட்ட/ஒன்றியமைய அளவிலான அனைத்து நிலை
அலுவலர்களும் கீழ் குறிப்பிட்டுள்ள பணிகள் மற்றும் பொறுப்புகளை செயல்படுத்திட வேண்டும்.
No comments:
Post a Comment