தினம் ஒரு தகவல் ‘ரோபோ’ ஆசிரியர்...! Robo Teacher - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, August 1, 2023

தினம் ஒரு தகவல் ‘ரோபோ’ ஆசிரியர்...! Robo Teacher

எந்த ஆசிரியரை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்? திட்டாத, அடிக்காத, கை வலிக்க வீட்டுப்பாடம் கொடுக்காத, ஜாலியாக பேசிக்கொண்டே பாடம் நடத்துகிற ஆசிரியர்னா எனக்கு ரொம்பப்பிடிக்கும் என்று பலர் கூறுவது உண்டு. இந்தப் பண்புகள் எல்லாமே சேர்ந்து கிடைக்கிற ஆசிரிய-ஆசிரியைகள் குறைவுதான். ஆனால், தென்கொரியாவில் ஆசிரியை ஒருவரை கண்டால் குழந்தைகளுக்கு ஏக குஷிதான். ஏன்னா, அவர் மனிதர் அல்ல, ரோபோ டீச்சர்...! தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் தாய்மொழியில்தான் பாடங்களை படிக்கிறாங்க. 

நம்ம ஊர்ல சொல்லிக்கொடுக்கிற மாதிரி எல்வாற்றுக்கும் ஆங்கிலத்தை சொல்லிக்கொடுக்க அங்கே போதிய ஆசிரியர்கள் கிடையாது. ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் பிள்ளைகளுக்கு அவ்வளவா ஆர்வம் கிடையாது. அதனால, ஜப்பான், தென்கொரியா நாடுகள்ல ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதற்காக ரோபோ டீச்சரை அறிமுகப்படுத்தினாங்க. இந்த ரோபோ வகுப்பறைக்குள்ள சுற்றி சுற்றி வந்து பிள்ளைகளுக்குப் பாடம் எடுத்து வருகிறது. 

 ஏ,பி,சி,டி. சொல்றது, ஆங்கில பாடல் பாடுறது, ஆங்கில பாடப்புத்தகத்தைப் படிக்கிறது என இந்த ரோபோ ஆசிரியரின் செயல்பாடு என்பது உண்மையான ஆசிரியர் போலவே இருக்கிறது. இந்த ரோபோ ஆசிரியை அடிக்க, திட்டமாட்டார். கொஞ்சி கொஞ்சி பாடம் எடுப்பார். ஆங்கிலம் என்றாலே ஓடிய குழந்தைகள், இந்த ரோேபாவின் வருகைக்கு அப்புறம் ஆர்வமா படிக்க ஆரம்பிச்சாங்க. எல்லாப் பிள்ளைகளுக்கும் ரோபோ டீச்சரைப் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. இதனால ஜப்பான், தென்கொரியாவுல பசங்களைப் படிக்க வைக்க நிறைய ரோபோ ஆசிரியர்களை உருவாக்கி இருக்காங்க. ஆங்கிலம் தவிர, வேற பாடங்களை நடத்துற ரோபோக்களையும் உருவாக்குகிற முயற்சியும் நடந்துக்கிட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment