வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Role Play) போட்டியினை நடத்துதல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 17, 2023

வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Role Play) போட்டியினை நடத்துதல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்

ஒவ்வொரு ஆண்டும், புதுடெல்லி, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும் நிதியுதவியுடன் வளரிளம் பருவக் கல்வி சார்ந்த பங்கேற்று நடித்தல் போட்டி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும். சென்னை 6. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைத்து 38 மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு பங்கேற்று நடித்தல் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. இப்போட்டியை பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடத்தப்பட்டு, மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளி மாணவர் குழுவிற்கு ஆங்கிலத்தில் பங்கேற்று நடித்தல் செயல்பாடுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு அக்குழு தென்மண்டல அளவில் பங்கேற்கும். தென்மண்டல அளவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாநில அணிகள் புதுடெல்லியுள்ள NCERT ல் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும். பங்கேற்று நடித்தல் போட்டி கீழ்க்காணும் ஐந்து தலைப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சூழ்நிலைகளில் நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment