மாணவர்களுக்கு உயர் தொழில் நுட்ப ஆய்வகம் மூலம் கணினி வாயிலாக மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி அளித்தல் சார்பாக SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 24, 2023

மாணவர்களுக்கு உயர் தொழில் நுட்ப ஆய்வகம் மூலம் கணினி வாயிலாக மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி அளித்தல் சார்பாக SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள்

பார்வையில் கண்டுள்ள பள்ளிக்கல்வித்துறை சட்டமன்றப் பேரவை அறிவிப்பு 16 -ல் "வளரிளம் பருவத்தினர் பெருந்தொற்றுக் காலத்தில் உளவியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துள்ளனர். அதனை ஈடுசெய்யும் வகையிலும், அவர்களின் சமூக மனவெழுச்சி நலனை மேம்படுத்தவும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கிடவும். மகிழ்ச்சியாகக் கற்றலில் ஈடுபடுவதற்கு ஏதுவாகவும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 44 கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment