ஸ்டெனோகிராபர் பணி Stenographer job - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 5, 2023

ஸ்டெனோகிராபர் பணி Stenographer job

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் ஸ்டெனோகிராபர் கிரேடு சி (93), கிரேடு டி (1114) என மொத்தம் 1,207 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

1-8-2023 அன்றைய தேதிப்படி கிரேடு சி பணி இடத்துக்கு 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 2-8-1993-க்கு முன்போ 1-8-2005-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அதேபோல் கிரேடு டி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

அதாவது 2-8-1996-க்கு முன்போ 1-8-2005-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஸ்டெனோகிராபி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-8-2023. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://ssc.nic.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

A total of 1,207 Stenographer Grade C (93) and Grade D (1114) vacancies are to be filled by the Stop Selection Commission (SSC). Candidates who have passed 12th standard can apply.

  Candidates between 18 to 30 years of age can apply for Grade C post as on 1-8-2023. That means they should not be born before 2-8-1993 or after 1-8-2005. Similarly, applicants for Grade D posts should be between 18 to 27 years of age.

i.e. should not have been born before 2-8-1996 or after 1-8-2005. There is also age relaxation as per government norms. Eligible candidates will be selected based on computer based test, stenography test. As far as Tamil Nadu is concerned, examination centers will be set up at Chennai, Coimbatore, Madurai, Salem, Trichy and Tirunelveli. Last date to apply: 23-8-2023. You can visit the website https://ssc.nic.in/ for detailed information about how to apply.

No comments:

Post a Comment