என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான ‘கேட்’ தேர்வு எப்போது? பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி. நிறுவனம் தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 28, 2023

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான ‘கேட்’ தேர்வு எப்போது? பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி. நிறுவனம் தகவல்

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான ‘கேட்’ தேர்வு எப்போது? பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி. நிறுவனம் தகவல் 

என்ஜினீயரிங் படிப்பை முடிக்கும் பட்டதாரி மாணவ-மாணவிக ளுக்காக தேசிய அளவில் என்ஜினீயரிங் பட்டதாரி திறன் தேர்வு என்று அழைக்கப்படும் (கேட்) தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத் தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு குறித்த அறிவிப்பை பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி) வெளியிட்டு உள்ளது. இந்தத்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 29-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு(2024) பிப்ரவரி மாதம் 3, 4, 10 மற்றும் 11-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. கணினி வாயிலாக ஒவ்வொரு நாளும் காலை மற்றும் பிற்பகலில் இந்தத்தேர்வு நடத்தப்பட உள்ளது. 

இந்தத்தேர்வை ஐ.ஐ.எஸ்சி., 7 ஐ.ஐ.டி.க்களுடன் இணைந்து நடத்த இருக்கிறது. தேர்வு முடிவு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 16-ந்தேதி வெளி யிடப்பட்டு, மதிப்பெண் அட்டைகள் அதே மாதம் 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும் என்று தேர்வை நடத்தும் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி) அறிவித்துள்ளது. இந்தநிலையில் கேட் தேர்வு நடைபெறும் நாட்களில், வேறு எந்த தேர்வுகளும் நடைபெறாதபடி கல்வியாண்டு நாட்காட்டியில் தொழில்நுட்பம் சார்ந்த கல்விநிறுவனங்கள் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தெரிவித்து இருக்கிறது.


No comments:

Post a Comment