வங்கியில் வேலை Working in a bank - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 5, 2023

வங்கியில் வேலை Working in a bank

வங்கி பணிகளுக்கான ஆட்களை தேர்ந்தெடுக்கும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) சார்பில் பல்வேறு வங்கிகளில் புரோபேஷனரி அதிகாரிகள் (பி.ஓ), மேலாண்மை பயிற்சியாளர்கள் (எம்.டி) என 3,049 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

21-8-2023 அன்றைய தேதிப்படி விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 20. அதிகபட்ச வயது 30. அதாவது விண்ணப்பதாரர்கள் 2-8-1993-க்கு முன்போ, 1-8-2003-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. 

முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், பெரம் பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் முதல்நிலைத்தேர்வு நடைபெறும். மெயின் தேர்வு சென்னை, மதுரை, திருநெல்வேலியில் நடைபெறும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-8-2023. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

Institute of Banking Personnel Selection (IBPS), which selects people for bank jobs, has released a notification to fill 3,049 job vacancies as Probationary Officers (PO), Management Trainees (MD) in various banks. Graduates can apply.

Minimum age to apply as on 21-8-2023 is 20. Maximum age is 30. That means candidates should not be born before 2-8-1993 and after 1-8-2003.

Eligible candidates will be selected on the basis of first stage exam, main exam and interview. For Tamil Nadu, the primary examination will be held at Chennai, Coimbatore, Cuddalore, Erode, Karur, Krishnagiri, Madurai, Nagercoil, Peram Balur, Pudukottai, Ramanathapuram, Salem, Thanjavur, Trichy, Tirunelveli, Vellore, Virudhunagar. The main exam will be held in Chennai, Madurai and Tirunelveli.

Last date to apply: 21-8-2023. Detailed details of application procedure can be visited at https://www.ibps.in/.

No comments:

Post a Comment