குரூப்-1, குரூப்-4 காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு எப்போது?
டி.என்.பி.எஸ்.சி. அட்டவணை வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது.
அந்த வகையில் நடப்பு ஆண்டில் எஞ்சியுள்ள மாதங்களில் அறிவிக்கப்பட உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களையும், அந்த பணியிடங்களுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும் என்ற தகவல்களையும் அட்டவணையாக வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, குரூப்-1 பதவிகளில் காலியாக இருக்கும் 32 பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்டு மாதம் (கடந்த மாதம்) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே ஓரிரு நாட்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. இந்த பணியிடத்துக்கான முதல் நிலை தேர்வு வருகிற நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கக்கூடிய குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பு வருகிற நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது.
இதுவரை எவ்வளவு காலி பணியிடங்கள் என்பது உறுதியாகாத நிலையில், எழுத்து தேர்வு அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் இம்மாதத்தில் 384 ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணியிடங்களுக்கும், அடுத்த மாதத்தில் (அக்டோபர்) 400 தொழில்நுட்ப பணியிடங்களுக்கும் என 13 வகையான துறை சார்ந்த காலி பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment