10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு -2024க்கு புதிய தேர்வு மையங்கள் அமைக்க கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவுரைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, September 20, 2023

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு -2024க்கு புதிய தேர்வு மையங்கள் அமைக்க கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவுரைகள்

அனுப்புநர் 
முனைவர்.பூ.ஆ.நரேஷ், இணை இயக்குநர் (பணியாளர்) 
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006. 

ஐயா/அம்மையீர், பொருள் : பார்வை : ந.க.எண். 015312/பி3/2023 

பெறுநர் 
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், 
இணை இயக்குநர்(கல்வி) பாண்டிச்சேரி / காரைக்கால் 

நாள்: 19.09.2023 

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6- இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2024 - புதிய தேர்வுமையங்கள் அமைத்தல் - கருத்துரு அனுப்புதல் தொடர்பான அறிவுரைகள் - சார்பு. அரசாணை (1டி) எண்.602, பள்ளிக் கல்வித்துறை (ஜிஇ1)த் துறை, நாள் : 11.10.2017.

 *** 
2023-2024ஆம் கல்வியாண்டு இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத்தேர்விற்கு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பான கருத்துருக்களை கீழ்க்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றி அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளிலிருந்து, மார்ச்/ஏப்ரல் 2024 இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத்தேர்வுக்கான புதிய தேர்வு மையங்கள் கோரும் கருத்துருக்களை அனுப்பி வைக்கக் கோரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதன்பின் பள்ளிகளிலிருந்து பெறப்படும் கருத்துருவினை ஆய்வுசெய்து பரிசீலனை செய்து, அப்பள்ளிகளை நேரில் பார்வையிட்டு பிற்சேர்க்கை "அ" மற்றும் " “ஆ” ஆகியவற்றைப் பூர்த்தி செய்து உரிய முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று கருத்துருக்களை அனுப்புதல் வேண்டும். தேர்வு மையங்கள் அமைப்பது இன்றியமையாதது என்று கருதப்படும் பள்ளிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின், அவசியம் தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் எனக் கருதினால் அதற்கான காரணத்தை தெளிவாகக் குறிப்பிட்டு திட்டவட்டமான தங்களது குறிப்புரையுடன் கருத்துருவாக அனுப்புதல் வேண்டும். 

மேலும், மே 2021-2022, ஏப்ரல் 2022 - 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான ஒராண்டுக்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு மையமாக செயல்பட வேண்டுமெனில் (சென்ற ஆண்டு வழங்கப்பட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை ! நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட்டிருப்பின்) மீண்டும் கருத்துரு அனுப்பி இயக்குநரின் ஆணை பெறவேண்டும் எனத் தெரிவிக்கலாகிறது. அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட புதிய தேர்வு மையங்கள் பற்றிய செய்தியினை மந்தணமாக வைத்துக்கொள்ளுதல் வேண்டும். பரிந்துரையின்றி பெறப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவிற்குப் பின் பெறப்படும் கருத்துருக்கள் ஆகியவை கண்டிப்பாக நிராகரிக்கப்படும். 

புதிய தேர்வு மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும் பள்ளிகள், இத்துடன் இணைத்தனுப்பப்படும் அரசாணையில் உள்ள விதிகளின்படி, தேர்வு மையங்களாக செயல்பட தகுதியுள்ளதை உறுதி செய்த பின் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்யப்படும் பள்ளிகள் பற்றிய அனைத்து விவரங்களையும் இத்துடன் அனுப்பப்படும் பிற்சேர்க்கை “அ” மற்றும் “ஆ” வில் சரியான முறையில் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். அரசாணையில் உள்ள விதிகளின்படி இல்லாத பள்ளிகளை தேர்வு மையம் வேண்டி பரிந்துரை செய்து அனுப்பப்படும் அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிடத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என அறிவிக்கலாகிறது.

10 கி.மீ. தூரத்திற்கு மேல் பயணம் செய்து தேர்வெழுத தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். பரிந்துரை செய்யப்படும் புதிய தேர்வு மையங்கள் ஏதும் இல்லை எனில் “இன்மை அறிக்கை” அனுப்புதல் வேண்டும். தற்பொழுது தேர்வு மையங்களாக செயல்படும் மையங்களில், இரத்து செய்யப்பட வேண்டிய தேர்வு மையங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை உரிய காரணங்களுடன் பட்டியலிட்டு படிவம் I-ல் (format I) பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் நீதிமன்ற ஆணையின் மூலம் தொடர்ந்து இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) தேர்வெழுதி வரும் பள்ளிகளின் பட்டியலை படிவம் II-ல் (format II) பூர்த்தி செய்தும் அனுப்புதல் வேண்டும். மார்ச்/ ஏப்ரல் 2024 பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்பட்டு வரும் பள்ளிகள் / புதியதாக தேர்வு மையம் கோரும் பள்ளிகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். 

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வு மையமாக செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட புதிய தேர்வு மையம் கோரும் கருத்துருக்களையும், ( பிற்சேர்க்கை “அ”, “ஆ" ) மேற்குறிப்பிட்டவாறு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களையும் (Format I & II), 25.10.2023-க்குள் அரசுத்தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாண்டு மார்ச்/ஏப்ரல் 2024 இடைநிலை பொதுத் தேர்வுகள் அனைத்தும் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளதால் அவற்றிற்குரிய முகப்புத்தாட்கள் முன்னதாகவே அச்சிட வேண்டிய சூழலில் மேலும் காலம் தாழ்த்தாது குறிப்பிட்டுள்ள தேதியிலேயே கண்டிப்பாக புதிய தேர்வு மையம் கோரும் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்காண் அறிவுரைகளை தவறாது பின்பற்றி தேவைப்படும் விவரங்கள் அனைத்தையும் 25.10.2023-க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இணைப்பு: அரசாணை, பிற்சேர்க்கை “அ”, “ஆ” மற்றும் படிவங்கள் | & || ஒம்/- இணை இயக்குநர் (பணியாளர்) நகல்: 1. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் (தங்கள் ஆளுகைக்குட்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கும் புதிய தேர்வு மையங்களை தாங்கள் ஆய்வு செய்து பரிந்துரைக்க தகுதியுடைய தேர்வு மையங்களை மட்டும் இத்துறைக்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது), 2. அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலர்கள்

No comments:

Post a Comment