இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு! உதவி அர்ச்சகர் ஊதியம் விகிதம் 15900 - 50400 | உதவி பூசாரி ரூ. 15000/- தொகுப்பூதியம் (மாதம் ஒன்றுக்கு) - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, September 3, 2023

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு! உதவி அர்ச்சகர் ஊதியம் விகிதம் 15900 - 50400 | உதவி பூசாரி ரூ. 15000/- தொகுப்பூதியம் (மாதம் ஒன்றுக்கு)

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு! உதவி அர்ச்சகர் ஊதியம் விகிதம்  15900 - 50400 | உதவி பூசாரி ரூ. 15000/- தொகுப்பூதியம் (மாதம் ஒன்றுக்கு) 

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் ஆனைமலை நகர் மற்றும் வட்டம் - கோவை மாவட்டம் வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்குறிப்பிட்டுள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்திட இந்து மதத்தை சார்ந்த தகுதியான நபர்களிடமிருந்து 03.10.2023 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 


1.தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
2. விண்ணப்ப படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரடியாகவோ அல்லது இணையதளமான www.hrce.tn.gov.in மற்றும் https://anaimalaimasaniamman.hrce.tn.gov.in என்ற இணைய தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
3. விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இணைத்து "உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை நகர் மற்றும் வட்டம், கோவை மாவட்டம் 642 104" என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் 03.10.2023 மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வைக்கப்படவேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. 
4. விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 
5. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. 2. திருக்கோயிலில் பின்பற்றப்படும் காமிக ஆகமத்தின்படி பூஜைகள் செய்வதற்கு முறையான பயிற்சி பெற்றமைக்கான சான்று பெற்றிருக்க வேண்டும். 
6. கூடுதல் விவரங்களை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் 
7. வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பினை நிர்வாக காரணங்களுக்காக இரத்து செய்யவோ, நிறுத்தி வைக்கவோ திருக்கோயில் நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் உண்டு. ரா.விஜயலட்சுமி, உதவி ஆணையர் / செயல் அலுவலர் வெ.ஆ.எண்.478/2023/செ.ம.தொ.அ./கோவை "சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்"

No comments:

Post a Comment