போக்குவரத்து துறையில் 451 காலியிடங்கள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 23, 2023

போக்குவரத்து துறையில் 451 காலியிடங்கள்

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: இன்ஜினியரிங் பிரிவில் 369 (கிராஜூவேட் 184, டிப்ளமோ 185), இன்ஜினியரிங் அல்லாத பிரிவில் 82 என மொத்தம் 451 இடங்கள் உள்ளன. இதில் மண்டலம் வாரியாக விழுப்புரம் 96, கோவை 96, நாகர்கோவில் 60, சேலம் 29, தர்மபுரி 23, திருநெல்வேலி 67, எஸ்.இ.டி.சி., 53, எம்.டி.சி., 27 இடங்கள் உள்ளன. , 

கல்வித்தகுதி: இன்ஜினியரிங் பிரிவுக்கு பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ, இன்ஜினியரிங் அல்லாத பிரிவுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். 2019 முதல் 2023ல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு ஸ்டைபண்டு: டிப்ளமோ பிரிவுக்கு ரூ. 8000, மற்ற பிரிவுக்கு ரூ. 9000 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 10.10.2023 விபரங்களுக்கு: boat-srp.com

No comments:

Post a Comment