எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீடு: கள ஆய்வு பணியில் 827 ஆசிரியர்கள் நியமனம் கல்வித்துறை உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 2, 2023

எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீடு: கள ஆய்வு பணியில் 827 ஆசிரியர்கள் நியமனம் கல்வித்துறை உத்தரவு

அரசு பள்ளி மாணவ-மாணவிகளிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

தற்போது இதை 4 மற்றும் 5-ம் வகுப்புக்கும் விரிவுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையில் செயல்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டத்தை மதிப்பீடு செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக பி.எட். மாணவர்களை கொண்ட குழுவை பள்ளிக்கல்வித்துறை நியமித்தது. 

இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன. இதையடுத்து கள ஆய்வு பணிக்காக 827 அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர்களை கண்காணிப்பாளர்களாக கல்வித்துறை நியமித்து, அவர்களுக்கு கீழ் பி.எட்.மாணவர்கள் கள ஆய்வை வருகிற 7-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மதிப்பீடு செய்ய இருக்கின்றனர். இதன் அடிப்படையில் திட்ட மேம்பாட்டுக்கான அடுத்தகட்ட நடவடிக்கையை பள்ளிக்கல்விதுறை மேற்கொள்ள இருக்கிறது.

No comments:

Post a Comment