தட்டச்சு தனித் தேர்வர்களுக்கு அக்டோபர் 9 முதல் தேர்ச்சி சான்றிதழ் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, September 29, 2023

தட்டச்சு தனித் தேர்வர்களுக்கு அக்டோபர் 9 முதல் தேர்ச்சி சான்றிதழ்

தட்டச்சு தனித் தேர்வர்களுக்கு அக்டோபர் 9 முதல் தேர்ச்சி சான்றிதழ்

தமிழகத்தில் கடந்த நடந்த அரசு வணிகவியல் தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித்தேர்வர்கள் சான்றிதழ்களை மாவட்ட மண்டல வினியோக மையங்களில் அக்.9 முதல் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.   

இந்த இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட்டில் இளநிலை, முதுநிலைக் கான தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு நடைபெறும். கடந்த பிப்ரவரியில் நடந்த தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித்தேர்வர்கள் உரிய ஆதாரங்களுடன் அடையாள அட்டை, ஆதார், தேர்வு மைய சீட்டு ஏதாவது ஒன்றை காண்பித்து அக். 9 முதல் முதல் அக்.11க்குள் தேர்வு எழுதிய மாவட்ட மண்டல வினி யோக மையங்களில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். 

குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்கப்படாத சான்றிதழ்களை அக். 20க்குள் அரசு தொழில் நுட்ப கல்வி இயக்கத்திற்கு மண்டல வினியோகம் மையம் அல்லது கல்லூரி முதல்வர்கள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment