அரசு பள்ளிகளை சுகாதாரமாக பேணி பாதுகாக்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை கடிதம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, September 1, 2023

அரசு பள்ளிகளை சுகாதாரமாக பேணி பாதுகாக்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை கடிதம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை சுகாதாரமான முறையில் வைத்திருக்க வகை செய்யும், ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டம் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம்' பல்வேறு கூறுகளைக் கொண்டதாகும். 

அதாவது, பள்ளி வளாகத்தை பசுமையாக வைத்திருப்பது, மாணவர்களிடையே தன் சுகாதாரத்தை பேணச் செய்வது, சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைப்பது, மறுசுழற்சிப் பணிகளை மேற்கொள்வது, பிளாஸ்டிக் இல்லாத வளாகத்தை உருவாக்குவது போன்றவை இந்த திட்டத்தில் அடங்கியுள்ள அம்சங்களாகும். 
இதற்காக, பல்வேறு குழுக்களை அமைப்பது அவசியமாகும். மாவட்ட அளவிலான குழுவை கலெக்டர் தலைமையிலும், வருவாய் கோட்ட அளவிலான குழுவை கோட்டாட்சியர்கள் தலைமையிலும் அமைக்க வேண்டும். இந்தக் குழுக்கள் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க உள்ளாட்சித்துறையுடன் இணைந்து பணியாற்றும். மாவட்ட, கோட்ட அளவிலான குழுக்களைப் போன்றே, பள்ளி அளவிலும் குழுக்கள் அமைக்க வேண்டும். இந்தக் குழுக்கள், ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டத்திலுள்ள கூறுகளை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றும். பள்ளிகளுக்கு விருதுகள் மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் 5 மாணவர்கள் அடங்கிய உபகுழுக்கள் உருவாக்கப்படும். 
இந்த துணைக் குழுக்கள், பள்ளிகளில் சுத்தமான குடிநீர் இருப்பதையும், வகுப்பறைகள் தூய்மையாக இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். பள்ளியை தூய்மையாக வைத்திருப்பதை உறுதி செய்ய, வாரத்தின் முதல் நாளில் பிரார்த்தனை கூட்டத்தில் மாணவர்கள் உறுதி எடுக்கவேண்டும். இந்த உறுதிமொழிகள் ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு கருப்பொருள்களை மையப்படுத்தி இருக்கும். ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர் சார்பில் விருதுகள் அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment