பள்ளிகளில் இரண்டாம் கட்டமாக கலையரங்கம் நடத்துதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, September 14, 2023

பள்ளிகளில் இரண்டாம் கட்டமாக கலையரங்கம் நடத்துதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 

விடுநர்

திருமதி. மா. ஆர்த்தி இ.ஆ.ப., 
மாநிலத் திட்ட இயக்குநர், 
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 
சென்னை - 600006. 

பெறுநர்

முதன்மைக் கல்வி அலுவலர்கள், 
அனைத்து மாவட்டங்கள். 

ந.க.எண்:129/ ஆ3/ கலை/ ஒபக/2023 நாள்:12.09.

பொருள் : பள்ளிக் கல்வித் துறை 2023 2023-2024ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் இரண்டாம் கட்டமாக கலைஞர்களைக் கொண்டு கலையரங்கம் நடத்துதல் ாவட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து. 

பார்வை : இவ்வலுவலக கடிதம் எண்:129/ஆ3/கலை/ஒபக/2023. நாள்:13.07.2023 


******** 
பார்வையில் காணும் இவ்வலுவலக கடிதத்தின் வாயிலாக 5038 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதல் கட்டமாக பள்ளிகளில் பணிபுரியும் 8048 கலை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களைக் கொண்டுகலை அரங்கம் தொடங்கப்பட்டு நடைப் பெற்று வருகிறது. 

கலை அரங்கம் கைப்பேசி செயலி 2023-24 

மேலும் கலை அரங்கத்திற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு வரும் கைப்பேசி செயலில் ஆசிரியர் பயிற்றுநருக்கான கட்டகம் (BRTE module) தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய கலைஞர்கள் விண்ணப்பித்தல் சார்ந்த கட்டகமும் (New ARP enrolment module) உருவாக்கப்பட்டு, பள்ளிக் கல்வித் துறையின் இணையத்தில் https://tnschools.gov.in/ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு கட்டகங்களையும் பயன்படுத்தி எவ்வாறு புதிய/ஏற்கனவே பணியாற்றிய கலைஞர்களை தெரிவு செய்தல் சார்ந்து சுய விளக்க படிநிலைகள் இணைப்பு-I ல் வழங்கப்பட்டுள்ளது. 
இதன் மூலம் இதுவரை பெறப்பட்டுள்ள 326 புதிய கலைஞர்களின் விண்ணப்பங்கள் EMIS வாயிலாக சார்ந்த ஆசிரியர் பயிற்றுநரின் EMIS loginக்கு அனுப்பப்படும். அவர்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே. ஒரு கலைஞர் 5 பள்ளிகளுடன் இணைத்து கலைஅரங்கம் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கலாம். மேலும் கடந்த ஆண்டு கலை அரங்கத்தில் பள்ளிகளில் பணியாற்றிய கலைஞர்களின் விவரங்கள் ஆசிரியர் பயிற்றுநர்களின் EMIS login-க்கு அனுப்பப்படும். அவர்களையும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தொடர்பு கொண்டு, அவர்களின் விருப்பத்தினைப் பெற்று, பள்ளிகளில் பணிபுரிய அனுமதிக்கலாம். எனவே, இவ்விரு முறைகளிலும் பள்ளிக் கல்வி துறையுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவிக்கும் தகுதியுள்ள கலைஞர்களை செப்டம்பர் 1, 2023 முதல் அரசு நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை அரங்கம் பயிற்சி அளிக்க அனுமதிக்கலாம். மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கலைவடிவங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், ஏற்கனவே முதல் கட்டமாக பள்ளிகளில் கலை அரங்கத்தில் பணிபுரியும் கலை சர்ந்த முழுநேர கலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களையும் கணக்கில் கொண்டு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் புதிய கலைஞர்களை பணிபுரிய அனுமதிக்கலாம். 

கலைஞர்கள்(ARP)களுக்கான வழிகாட்டுதல்கள்: 

கலைஞர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொள்ள வேண்டும். தங்களுக்கான படிவத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கலையரங்கு நிகழ்வுகள் பள்ளியில் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment