சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 30, 2023

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அறிவிப்பு

டிசம்பர் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அறிவிப்பு தொடர் வைப்பு நிதிக்கான வட்டி 6.7 சதவீதமாக உயர்வு 

அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் டிசம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில் முக்கியமாக 5 ஆண்டுக்கான தொடர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் சேமிப்பு வைப்புத்தொகை வட்டி 4 சதவீதமாகவும், ஓராண்டுக்கான வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் 6.9 சதவீதமாகவும் தொடர்கிறது. 2 மற்றும் 3 ஆண்டு வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7 சதவீதமாகவும், 5 ஆண்டு வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாகவும் உள்ளது. 

 மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டிவிகிதம் 8.2 சதவீதம் எனவும், மாதாந்திர வருவாய் கணக்கு திட்ட வட்டி விகிதம் 7.4 சதவீதம், பொது வருங்கால வைப்பு நிதி திட்ட வட்டி விகிதம் 7.1 சதவீதம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கிசான் விகாஸ் பத்திரங்களின் வட்டி விகிதம் 7.5 சதவீதம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி கணக்குக்கான வட்டி விகிதம் 8 விகிதமாக நீடிப்பதாகவும் நிதியமைச்சக அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment