பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் தற்காலிக சான்றிதழ்கள் மற்றும் பட்டங்களில் ஆதார் எண்களை அச்சிடுவது குறித்து மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன.
இந்தநிலையில் உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் தற்காலிக சான்றிதழ்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களில் முழு ஆதார் எண்ணை அச்சிட வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் பேராசிரியர் மனிஷ் ஜோஷி பல்கலைக்கழகங்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
சில மாநில அரசுகள் ஆட்சேர்ப்பு அல்லது சேர்க்கையின்போது ஆவணங்களின் சரிபார்ப்பிற்கு பின்னர் பல்கலைக்கழக மாணவர்களின் முழு ஆதார் எண்ணை தற்காலிக சான்றிதழ்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களில் அச்சிடுவது குறித்து பரிசீலித்து வருவது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
விதிமுறைகளின்படி, ஆதார் எண்ணை வைத்திருக்கும் எந்தவொரு நிறுவனமும் அதை பொதுவில் வெளியிடக்கூடாது பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் ஆதார் எண்களை அச்சிடுவதற்கு அனுமதி இல்லை. உயர்கல்வி நிறுவனங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாவறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment