ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணி - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, September 4, 2023

ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணி

ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரி யர்களாகப் பணியாற்றுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க லாம். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை பள் ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ஆங்கிலம்-2, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா ஒன்று என மொத்தம் 5 காலிப் பணியிடங்கள் உள்ளன. இடைநிலை ஆசிரி யர் நிலையில் 22 காலிப் பணியிடங்களும் உள்ளன. பட்டதாரி ஆசிரியர் நிலையில் மாதம் ரூ.15 ஆயிரமும், இடைநிலை ஆசிரி யர் நிலையில் மாதம் ரூ.12 ஆயிரமும் தொகுப்பூதியமாக வழங்கப் படும். 
வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன் னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் அல்லது வரையறுக் கப்பட்டகல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோருடன், இடைநிலை ஆசிரியர்கள் நியம னத்தில் பட்டியலினத்தவர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதி மற் றும் அதன் அருகிலுள்ளவர்களுக்கும் பணி நியமனத்தில் முன்னு ரிமை வழங்கப்படும். 

விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமாக விண்ணப் பங்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றிதழ்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவி டர், பழங்குடியினர் நல அலுவலரிடம் செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கால நிர்ணயத்துக்குப் பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்பட மாட்டாது என்றார் ஆட்சியர்.

No comments:

Post a Comment