வெறும் வயிற்றில் சாக்லெட் சாப்பிடலாமா?
உலகெங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவுப்பொருட்களில் ஒன்றாக சாக்லெட் விளங்குகிறது. இது கோகோ பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் சாக்லெட்டில் பிளாவனாய்டுகள், காபின், தியோ புரோமைன் உள்ளிட்ட உடலுக்கு நன்மை சேர்க்கும் சேர்மங்களும் கலந்துள்ளன. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாக்லெட் சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது.
சாக்லெட்டின் வகையும், அவரவரின் தனிப்பட்ட ஆரோக்கியமும்தான் அதனை தீர்மானிக்கும்.
ஏனெனில் டார்க் சாக்லெட்டை பொறுத்தவரை மற்ற சால்கெட்டுகளை விட ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் அதிக கோகோ உள்ளடங்கி இருக்கும். மற்ற சாக்லெட் வகைகளை விட சர்க்கரை குறைவாக இருக்கும் என்பதுதான் அதற்கு காரணம்.
எந்த நோய் பாதிப்புக்கும் ஆளாகாதவர்கள் வெறும் வயிற்றில் டார்க் சாக்லெட் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடலுக்கு கூடுதல் எனர்ஜி கொடுக்க உதவும். அதே வேளையில் டார்க் சாக்லெட் சிலருக்கு செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
அப்படிப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் டார்க் சாக்லெட் சாப்பிடக்கூடாது.
டார்க் சாக்லெட்டை ஒப்பிடும்போது மில்க் சாக்லெட் மற்றும் ஒயிட் சாக்லெட் இவை இரண்டும் ஆரோக்கியம் குறைவானவை. இவற்றில் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும். கோகோ குறைவாகவே இருக்கும். வெறும் வயிற்றில் இந்த இரண்டு சாக்லெட்டுகளையும் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
நீரிழிவு மற்றும் ரத்த சர்க்கரையுடன் தொடர்புடைய நோயாளிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மற்றவர்கள் இந்த சாக்லெட்டுகளை குறைவாக சாப்பிடலாம்.
அதிகமாக சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்வதோடு குமட்டல், செரிமான கோளாறு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் பருகிவிட்டு அதன் பிறகு சாக்லெட் சாப்பிடுவது சிறந்தது.
Can You Eat Chocolate on an Empty Stomach?
Chocolate is a widely beloved treat enjoyed by people of all ages, from children to adults. It is made from cocoa beans and contains compounds like flavonoids, caffeine, and theobromine, which can offer some health benefits. However, the question of whether it's safe to eat chocolate on an empty stomach has raised concerns among many.
The type of chocolate and an individual's unique health considerations play a significant role in determining whether it's advisable to consume chocolate without eating anything else. Dark chocolate tends to be considered a healthier option compared to milk chocolate and white chocolate because it contains higher levels of cocoa and fewer added sugars.
For some people, eating dark chocolate in moderation on an empty stomach may not pose any significant health risks. Dark chocolate, in particular, has been associated with potential heart health benefits due to its flavonoid content, which can help improve blood flow and reduce blood pressure. However, excessive consumption of any chocolate, even dark chocolate, can lead to weight gain and other health issues.
On the other hand, milk chocolate and white chocolate contain more added sugars and fewer health-promoting compounds, so consuming them on an empty stomach is generally not recommended. Eating these types of chocolate without any other food to slow down the absorption of sugar can lead to a rapid spike in blood sugar levels, potentially causing energy crashes and cravings for more sugary foods.
Individuals with certain health conditions, such as diabetes or hypoglycemia, should be particularly cautious about eating chocolate, especially on an empty stomach, as it can lead to rapid fluctuations in blood sugar levels.
In conclusion, the decision to eat chocolate on an empty stomach should be made based on the type of chocolate and individual health considerations. Dark chocolate, in moderation, may be acceptable for some people, but it's generally advisable to enjoy chocolate as part of a balanced meal or snack to prevent potential spikes in blood sugar and to maximize its health benefits.
No comments:
Post a Comment