தினம் ஒரு தகவல் : இருமல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, September 6, 2023

தினம் ஒரு தகவல் : இருமல்

இருமல் என்பது நம் சுவாசப் பாதையை சுத்தப்படுத்துவதற்காக உடல் ஏற்படுத்திக்கொண்ட இயற்கையான ஒரு செயல்பாடு. இருமல் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. 

காற்றில் கலந்து வரும் தூசி, புகை, வாசனை, வேதிப்பொருட்கள் எனப்பலவும் இருமலை தூண்டலாம். மூக்கு, தொண்டையில் தொடங்கி நுரையீரலின் மூச்சு சிறுகுழல்கள்வரை எந்த இடத்திலும் கிருமிகள் தாக்கி, சளி பிடித்து இருமல் வரலாம். தடுமம், தொண்டைப்புண், மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய், ஆஸ்துமா, நிமோனியா, புற்றுநோய் உள்ளிட்ட தொற்றுகள் இருமலை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வாமையும், புகைபிடித்தலும் இருமலை வரவேற்பவை. சுவாசப் பாதைக்குத் தொடர்பில்லாத அல்சர், நெஞ்செரிச்சல், குடல்புழு காரணமாகவும் இருமல் வரலாம். உணவு புரையேறினால்கூட இருமல் வரும். இப்படியான காரணங்களைக் கொண்டு, இருமலை பல வகையாக மருத்துவத்துறை பிரித்துள்ளது. 

திடீர் இருமல், நாட்பட்ட இருமல், வறட்டு இருமல், சளி இருமல், ஒவ்வாமை இருமல், ஆஸ்துமா இருமல், இரவு நேர இருமல் ஆகியவை அவற்றுள் முக்கியமானவை. இருமலானது சுவாச பாதையில் எந்த இடத்தில் உருவாகிறதோ, அதைப் பொறுத்தும், சளி அல்லது நீர் கோத்திருக்கிறதா, இல்லையா என்பதைப் பொறுத்தும், ஆஸ்துமாவை பொறுத்தும் இருமலின் சத்தம் வேறுபடும். அதை வைத்தே நோய் பாதிக்கப்பட்டுள்ள இடத்தை மருத்துவரால் தெரிந்துகொள்ள முடியும். 

அடுத்த கட்டமாக, ஸ்டெதாஸ்கோப்பைக் கொண்டு பாதிக்கப்பட்டவரின் மார்பை முறையாகப் பரிசோதிக்கும்போது, இருமலுக்கு காரணமும், அதன் வகையும் தெரிந்துவிடும். இருமல் மருந்துகளில் பல வகை உண்டு. எனவே சுயமாக வாங்கி உட்கொள்ளும்போது, அவற்றின் அளவு அதிகமாகி ஆரோக்கியம் கெடலாம். இருமல் நீடித்தால் அல்லது இருமலுடன் காய்ச்சல், சளி, உடல் மெலிவது, குரல் மாறுவது போன்ற துணை அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரைச் சந்திக்க வேண்டியது அவசியம். இருமல் மருந்தைக் குடிக்காமலும் ஒரு வகை இருமல் குணமாகும். எப்படியென்றால், மற்ற நோய்களுக்காகச் சாப்பிடும் சில மாத்திரைகளாலும் இருமல் வரும். அதை மாற்றினால், அளவை குறைத்தாலும் இருமல் மட்டுப்படும், என டாக்டர்கள் கூறுகிறார்கள்.


"Cough" is a natural process in our respiratory system aimed at cleansing it. There are various factors contributing to the occurrence of cough. 

 Substances like dust, pollen, fragrances, and chemicals in the air can trigger coughing. From the nose, down to the bronchial tubes in the lungs, irritants like smoke can lead to the development of a cough. Conditions such as throat irritation, tonsillitis, nasal congestion, colds, asthma, pneumonia, and bronchitis are significant contributors to coughing. Dietary habits can also play a role in causing coughs. All these various factors have led to the diversification of cough-related treatments in the medical field. Persistent cough, acute cough, chronic cough, cold-induced cough, nighttime cough, asthma-related cough, and nocturnal cough are among the important types of cough. 

The nature of cough varies based on where it occurs in the respiratory pathway, whether it is associated with a cold or water in the chest, or if it is unrelated to those. Medical professionals can identify its location through various tests, including a chest X-ray when evaluating a patient with a cough. There are many types of cough medications available. Therefore, when purchasing them, it is advisable not to self-prescribe, as excessive use can lead to health problems. If there is a persistent cough, cold, difficulty breathing, chest congestion, or changes in voice, it is essential to consult a healthcare provider. Some types of cough can be managed without medication. It can be controlled by avoiding certain triggers and making lifestyle changes. 

However, in some cases, coughs can be exacerbated by other diseases. Therefore, it is crucial to seek medical advice. Cough medications should not be consumed without consulting a healthcare professional, as some may worsen coughing. By making adjustments, even minimal consumption of certain foods can trigger coughing. If it is modified, even with reduced consumption, coughs can be managed, according to doctors.

No comments:

Post a Comment