அடிக்கடி முகம் கழுவலாமா? - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, September 28, 2023

அடிக்கடி முகம் கழுவலாமா?

சரும அழகைக்கூட்ட என்னென்ன செய்யலாம் என்பதைத்தான் எல்லோரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சில நேரங்களில் சிலவற்றைத் தவிர்த்தாலே நம் சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பேணிக்காக்க முடியும். முகப்பரு, கரும்புள்ளியை கண்டதும் முகம் பார்க்கும் கண்ணாடியும் கையுமாக மாறிவிடுவோம். 


முதலில் முகப்பருவை தொட்டுப் பார்க்கவே கூடாது. அதிலும் முகப்பருவை போக்க பக்கத்து வீட்டார் கொடுத்த அறிவுரை, நண்பர்களின் டிப்ஸ், கேள்விப்பட்டது கேள்விப்படாதது என எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்தால் நீங்காத தழும்பு முகத்தில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. முகத்தை பிரகாசமாக வைத்துக்கொள்ள அடிக்கடி முகம் கழுவுவது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். சொல்லப்போனால் முகப்பொலிவை பாதுகாக்க இயற்கையில் சருமத்தில் இருந்து எண்ணெய் சுரக்கும். அடிக்கடி முகம் கழுவுவதால் இந்த எண்ணெய் நீக்கப்பட்டு தோலின் ஈரப்பதம் குறைந்து, வறண்ட சுருக்கமான சருமம்தான் மிஞ்சும். 

இதே போல் சரும கிரீம்களை பயன்படுத்துபவர்கள் பலர். சருமத்தின் அழகு, ஆரோக்கியம் மீது அக்கறை கொண்டவர்கள்கூடக் கழுத்து பகுதிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. தினமும் காலையும் இரவும் முகத்தில் முகத்தில் கிரீம்களை பூசிவிட்டுக் கையிலிருக்கும் மிச்சம் மீதியைக் கழுத்தில் தேய்ப்பவர்கள்தான் பெரும்பாலானோர். எதையும் அதிகப்படியாக பிரயோகிப்பது கேடு விளைவிக்கும்.

Do you wash your face often?


Everyone keeps telling us what we can do to make our skin beautiful. Sometimes avoiding certain things can keep our skin healthy and beautiful. When we see pimples and blackheads, our face becomes a mirror and a hand.


First of all, do not touch the pimple. Especially if you try everything like the advice given by your neighbors, the tips of your friends, what you have heard and not heard, it is more likely that you will get a scar on your face that will not go away. Washing your face frequently to keep your face glowing can have negative effects. In other words, the skin naturally secretes oil to protect the face. Frequent face washing removes this oil and dehydrates the skin, leaving dry, wrinkled skin.


Similarly, many people use skin creams. Even those who care about the beauty and health of the skin do not give importance to the neck area. Most of the people apply creams on their face every morning and night and rub the rest on their neck. Too much of anything can be harmful.

No comments:

Post a Comment