பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தேசிய நுழைவுத்தேர்வுகள் குறித்த தகவல்களை தெரிவிக்கவேண்டும் பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, September 14, 2023

பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தேசிய நுழைவுத்தேர்வுகள் குறித்த தகவல்களை தெரிவிக்கவேண்டும் பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு

பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தேசிய நுழைவுத்தேர்வுகள் குறித்த தகவல்களை தெரிவிக்கவேண்டும் பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு 

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கும், உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நடப்பு கல்வியாண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் குறித்த மாதாந்திர தகவல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

 அந்தவகையில், அடுத்த மாதம் (அக்டோபர்) நடத்தப்பட உள்ள கிளாட் நுழைவுத்தேர்வு, நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்.ஐ.டி., யு.சி.இ.இ.டி. மற்றும் நிப்டு தேர்வுகள், டிசம்பர் மாதத்தில் நடக்கும் ஜே.இ.இ., என்.சி.எச்.எம்., ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் நெஸ்ட், பிப்ரவரி மாதத்தில் நடக்கும் நாட்டா, மார்ச் மாதத்தில் நடைபெறும் கியூட் மற்றும் ஐ.எஸ்.ஐ. தேர்வுகள் குறித்த தகவல்கள், அதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு தெரிவிக்கவேண்டும் என கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. 

 இதன்படி, இந்த மாதத்தில் தேசிய அளவில் நடைபெறும் சட்டப்படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு (கிளாட்) தொடர்பான தகவல்கள், சட்டம் படிப்பதினால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் தெளிவுபடுத்துவதோடு, அதற்கு விண்ணப்பம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Education Department orders schools to provide information about national entrance exams to students studying Plus-2

 Various activities are being carried out in the current academic year to provide higher education guidance and counseling to Class Plus-2 students studying in Government Higher Secondary Schools. Subsequently, it is planned to provide monthly information about higher education guidance classes and entrance exams.

  Accordingly, the Claude entrance exam to be held next month (October), NIT, UCET to be held in November. And NIPT exams like JEE, NCHM in December, NEST in January, NATA in February, QEET in March and ISI. The education department has issued an order to the schools to inform the students about the information about the exams and its importance.

  According to this, the information related to the Common Entrance Test (GLAAD) for law studies which will be held at the national level this month, also clarifying the employments available by studying law, and necessary steps should be taken to apply for it.

No comments:

Post a Comment