1 முதல் 5-ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை நீட்டிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, September 26, 2023

1 முதல் 5-ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

2023-24-ம் கல்வியாண்டு நாட்காட்டியில் காலாண்டு தேர்வுகள் முடிந்து, பள்ளிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியினை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பயிற்சி, அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது. 

இதில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறை அடுத்த மாதம் 8-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு 9-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என்றும் கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. அதே வேளையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 3-ந் தேதி வகுப்புகள் தொடங்கி நடைபெறும்.

In the academic year calendar 2023-24, it was reported that after the quarter exams are over, schools will open on 3rd of the next month (October). The 2nd term training will be given from 3rd to 6th of next month to the teachers who are teaching the students of class 1 to 5 in government and government aided primary and middle schools.

All teachers are required to attend. Considering this, the education department has announced that the quarterly vacation has been extended till the 8th of the next month only for the students of classes 1 to 5 studying in the government and government-aided primary and middle schools, and the schools will be opened and classes will be held for them from the 9th. At the same time, classes will start on the 3rd of the next month for the students of classes 6 to 8 in all government and government-aided middle schools.

No comments:

Post a Comment