12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை - மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, September 13, 2023

12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை - மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை - மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு 


 சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவுவதால் 12 லட்சம் மாணவர்களுக்கு வரும் 16-ந்தேதி முதல் கண் பரிசோதனை செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். 

 வார்டில் ஆய்வு 

சென்னை, எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இதேபோல, ‘மெட்ராஸ் ஐ’ நோயால் பாதிக்கப்பட்டோருக்கான வார்டில் சென்று ஆய்வு மேற்கொண்டு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

 ‘மெட்ராஸ் ஐ' என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி நோய் சென்னை பகுதியில் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களிலும் இந்த நோய் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக இந்த நோய் பாதிப்பு என்பது கூடுதலாகி கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு எடுத்த விழிப்புணர்வு நடவடிக்கைகளால் இந்தாண்டு நாள் ஒன்றுக்கு 100-க்கும் குறைவானவர்களே இந்நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். 

 பருவநிலை மாறுபாடு 

 எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ‘மெட்ராஸ் ஐ' வார்டில் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். கண் வலி, கண் சிவந்து போகுதல், கண்களில் நீர் வழிதல், எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுதல், கண்களில் தூசி அல்லது வேறு வெளிப்பொருள் உள்ளது போன்ற உணர்வு ஏற்படுதல் இதன் அறிகுறியாகும். இது பருவநிலை மாறுபாட்டினாலும் ஒரு விதமான வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் வரக்கூடியது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டால் கண்கள் மற்றும் கைகளை நல்ல நீரினால் அடிக்கடி கழுவ வேண்டும். சுயமாக மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய திசு காகிதம் மற்றும் கைக்குட்டையை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. நல்ல ஆரோக்கியமான நீர்ச்சத்து மிகுந்த வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு வகைகளை உண்ணவேண்டும். கண்ணுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். பொதுமக்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதேபோல, ‘மெட்ராஸ் ஐ' சிகிச்சைக்கான மருந்துகள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 கண் பரிசோதனை 

 ‘மெட்ராஸ் ஐ' குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. எனவே, சென்னையில் மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என்று ஏறத்தாழ 12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இந்த மாதம் கண் பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 16-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக அனைத்து பள்ளிகளிலும் கண் பரிசோதனை செய்யப்படும். 400-க்கும் மேற்பட்ட அரசு கண் டாக்டர்கள், தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இதில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில், இ.பரந்தாமன் எம்.எல்.ஏ., மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சாந்திமலர், எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரி இயக்குனர் தங்கராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Eye examination for 12 lakh students - Hon'ble Minister M. Subramanian orders

  Minister M. Subramanian has ordered 12 lakh students to undergo eye examination from 16th due to the rapid spread of 'Madras Eye' in Chennai.

  Examination of the ward

  Minister of Medicine and Public Welfare, M. Subramanian yesterday conducted an inspection at the Egmore Government Eye Hospital in Chennai and inquired about the treatments provided to the patients. Similarly, he visited the ward for 'Madras Eye' patients and inquired about the treatments being provided. Following this, Minister M. Subramanian told reporters:-

  Conjunctivitis known as 'Madras eye' has started to increase slightly in Chennai region. The disease is also increasing in various states like Gujarat, Maharashtra, Assam. The prevalence of this disease is increasing every year before the northeast monsoon. Due to the awareness measures taken by the Tamil Nadu government, less than 100 people are suffering from this disease every day this year and are coming to the hospital.

  Climate variability

  Currently only 5 people are receiving treatment in 'Madras Eye' ward of Egmore Government Hospital. Symptoms include eye pain, redness, watery eyes, irritation and itching, and a sensation of dust or other foreign matter in the eyes. It can be caused by a variety of viruses and bacteria due to seasonal variation. If affected by this disease, eyes and hands should be washed frequently with good water. Do not self-medicate. Avoid going to public places. Tissue paper and handkerchiefs used by infected people should not be used by others. Eat healthy foods that are rich in vitamins A and C. Rest the eyes. Members of the public must adhere to these guidelines. Similarly, medicines for the treatment of 'Madras Eye' have been advised to be ready.

  Eye examination

  There is a huge need for awareness about 'Madras Eye'. Therefore, it has been decided to conduct eye examination this month for approximately 12 lakh students of corporation schools, private schools and government-aided schools in Chennai. Accordingly, eye examination will be conducted in all schools for 10 consecutive days from 16th to 25th. More than 400 government eye doctors and private hospital doctors are going to be involved in this. This is what he said. E. Barandaman MLA, Director of Medical Education and Research Santhimalar, Egmore Government Eye Hospital Director Tangarani participated in this event.

No comments:

Post a Comment