பற்களை பாதுகாக்கும் உணவு பொருட்கள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, September 15, 2023

பற்களை பாதுகாக்கும் உணவு பொருட்கள்

பற்களை பாதுகாக்கும் உணவு பொருட்கள் 

 உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவே வாய்வழி ஆரோக்கியத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும். பற்களையும், ஈறுகளையும் சீராக பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வலு சேர்க்கும். ஒருசில உணவு பழக்கத்தை தவறாமல் பின்பற்றுவது வாய் வழி ஆரோக்கியத்தை பேணவும், பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். 

 தினமும் பழங்கள், காய்கறிகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றில் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. உதாரணமாக ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது. இது பற்களை வெண்மையாக்க உதவும்

. கொழுப்பு நிறைந்த மீன்களும் ஈறுகளுக்கு வலு சேர்க்கும். சால்மன், டுனா, கானாங்கெளுத்தி போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள மீன்கள், ஈறுகளை நோயில் இருந்து பாதுகாக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. 

 பற்களை வலுவாக்குவதில் பால் பொருட்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவற்றில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளன. அவை பற்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும். தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன. மேலும் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் வாய்வழி ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். தயிர், மோர், வெண்ணெய், நெய், பால், பாலாடைக்கட்டி என ஏதாவதொரு வகையில் பால் பொருட்களை தினமும் உட்கொள்ள வேண்டும். 

 நட்ஸ் வகைகளை சாப்பிடுவதும் வாய் வழி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அவை நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் தாதுப்பொருட்களை கொண்டுள்ளன. வாய் பகுதியில் பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகமானால் பற்கள் மற்றும் ஈறுகளில் பிளேக் படர தொடங்கும். அதனை அகற்றாவிட்டல் மஞ்சள் பற்கள், பல் சிதைவு, ஈறு சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கும். பற்களில் இருந்து பிளேக் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற நட்ஸ்கள் உதவும். உதாரணமாக பாதாமில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளடங்கி இருக்கிறது. இவை இரண்டும் வலுவான பற்களுக்கு அவசியம். 

 தேநீரில் உள்ள புளோரைடு பற்களை வலுப்படுத்தவும், துவாரங்களைத் தடுக்கவும் உதவும். மேலும் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் ஈறு நோயைத் தடுக்க உதவி புரியும். குறிப்பாக கிரீன் டீயில் புளோரைடு மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. எனவே கிரீன் டீ பருகி வரலாம். 

 சர்க்கரை கலக்காத சுவிங்கத்தை சுவைப்பதும் வாய் வழி ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகை செய்யும். ஏனெனில் சூயிங்கம் உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டும். உணவுத் துகள்கள் மற்றும் நுண்ணுயிரிகளை அகற்ற உதவும். ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

Foods that Protect Teeth and Gums

Just as it is important for the health of internal organs, paying attention to oral health is equally crucial. Taking care of your teeth and gums plays a vital role in overall well-being. Promoting dental and gum health goes beyond just brushing teeth and flossing. Including certain foods in your diet can contribute to maintaining strong teeth and healthy gums.

Eating fruits and vegetables daily without fail is essential. They are rich in vitamins, minerals, and antioxidants that are beneficial for both teeth and gums. For instance, apples contain malic acid which helps in whitening teeth. It also acts as a natural toothbrush, removing bacteria and food particles from your teeth. Additionally, the fiber in fruits and vegetables stimulates saliva production, which is crucial for maintaining oral health.

Fatty fish with high levels of Omega-3 fatty acids, such as salmon, tuna, and mackerel, can help protect your gums and teeth. Omega-3 fatty acids are known to reduce inflammation, which is a key factor in gum disease. Incorporating these fish into your diet can assist in preventing gum problems and maintaining overall oral health.

Dairy products play a significant role in strengthening teeth. They are rich in calcium and phosphorus, which are essential for tooth development and maintenance. Yogurt, in particular, contains probiotics that promote oral health by reducing the growth of harmful bacteria in the mouth. Including dairy products like milk, cheese, and yogurt in your daily diet is a must.

Nuts also contribute to maintaining good oral health. Almonds, for example, are high in calcium and protein, which are essential for strengthening teeth. They can help combat tooth decay and gum disease. Moreover, nuts are rich in antioxidants and provide a crunchy texture that can help remove plaque and bacteria from the teeth's surface.

Green tea is known to benefit oral health. It contains polyphenols that help in reducing bacteria and inflammation in the mouth. Drinking green tea regularly can be a part of your oral care routine.

Avoiding sugary snacks and beverages is equally important in safeguarding your oral health. Sugar can feed harmful bacteria in your mouth, leading to tooth decay and gum problems. Opt for sugar-free options or limit your sugar intake to protect your teeth and gums.

Incorporating these foods into your daily diet can contribute to healthier teeth and gums. Remember, a balanced diet, along with proper oral hygiene practices, is essential for maintaining your overall oral health.




No comments:

Post a Comment