வீட்டுக்கு வெளியே விளையாட விடுங்கள்...!
அந்தக் காலத்தில் குழந்தைகள் நேரம் கிடைக்கும்போதெல்லாம், வீட்டுக்கு வெளியேதானே விளையாடினார்கள். விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம், பகல் முழுவதும் வீட்டுக்கே வராமல் கூட விளயைாடுவார்கள். அதனால் அவர்களின் கண் பாதுகாக்கப்பட்டது.
ஆனால், இப்போது அதற்கு நேர் எதிராகச் செயல்படுவதுதான் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம்.
கண் பாதுகாப்பு குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளின் கையில் அதிக நேரம் செல்போன் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
‘போன் கொடுக்கவில்லை என்றால் சாப்பிட மாட்டான், அடம் பிடிப்பான் என்று நினைப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.
ஒருநாள் பழக்கம், பின்னர் வழக்கமாக மாறிவிடும். குழந்தைகளுக்குத் தேவையில்லாமல் ஸ்மார்ட்போனை வாங்கித் தரக்கூடாது.
சமூக வலைத்தளங்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே கிட்டப்பார்வை குறைபாட்டைக் கொண்ட குழந்தைகளுக்கு பவர் அதிகரிக்கும்போது, பார்வையைப் பாதிக்கும் தீவிரப் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
எனவே இதற்கு ஒரே வழி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் விளையாடச் செய்வதுதான்.. இதன்மூலம் பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க முடியும். ஏற்கனவே, கிட்டப் பார்வைக்குக் கண்ணாடி அணிந்திருப்பவர்களும் வீட்டுக்கு வெளியில் அதிக நேரம் விளையாடுவதன்மூலம் கண்ணாடி பவர் அதிகரிப்பது தடுக்கப்படுவதுடன், கூடுதல் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Let's play outside the house...!
In those days children played outside the house whenever they got time. Not to mention holidays, they play all day without coming home. So their eye was protected.
But now the root cause of the problem is the exact opposite. Awareness should be created among children about eye protection. Children should stop giving cell phones too much time in their hands. "First of all, we should stop thinking that if we don't give the phone, we won't eat.
One day a habit, then a habit. Children should not be given smartphones unnecessarily. Social networking sites should be used only when necessary. Children who are already myopic are more likely to develop serious problems that affect vision when power increases.
So the only way to do this is to make children play outside the house whenever they get time. Already, studies have shown that people who wear nearsighted glasses are also prevented from increasing glasses power by spending more time playing outdoors and from further damage.
No comments:
Post a Comment