2016-17-ம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை மேம்படுத்த அந்த பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீடு ஆய்வு செய்வதற்கு தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக மையம் (என்.ஐ.இ.பி.ஏ.) தேசிய அளவிலான பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஆய்வு பணிகள் வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை அறிவுறுத்தி இருக்கிறது.
Read this Also : அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை
அதன்படி, அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் வகுப்பறை, நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், கணினி, மின்வசதி, மதிய உணவு, குடிநீர் வசதி, கழிவறை வசதி, கை கழுவும் வசதிகள் போன்றவை குறித்தும், பள்ளி மேலாண்மை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் பள்ளிகளின் நடவடிக்கை குறித்தும் தரம் மற்றும் சுயமதிப்பீடு ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வில் வட்டாரக் கல்வித் துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் மூலமாக ஆய்வு நடத்தப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment