பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி:
முன்பதிவு செய்ய பள்ளிகளுக்கு அழைப்பு
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா
வையொட்டி, பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி வரும் 9–
ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முன்பதிவை வரும் 8-ஆம்
தேதி வரை பள்ளிகள் சார்பில் மேற்கொள்ளலாம்.
இது குறித்து அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் மா.அரவிந்த்
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி,
பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது. வரும்
9-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை,
சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் போட்டி நடைபெ
றவுள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு பிரிவில் ஓவியத்தில்
திறன் பெற்றுள்ள ஒரு மாணவரை போட்டியில் பங்கேற்க அனுப்பி
வைக்கலாம்.
இயற்கை காட்சிகளுடன் தமிழக நினைவுச் சின்னம் அல்லது
அருங்காட்சியக அரும் பொருள்களில் ஏதாவது ஒன்றின் ஓவியத்தை
4 முதல் 6 வரையிலான பள்ளி மாணவர்கள் வரைய வேண்டும். 7
முதல் 9 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, நான் விரும்பும் சுதந்
திரப் போராட்ட வீரர் அல்லது திருக்குறளுடன் அதற்குண்டான
பொருளுடன் ஓவியம் வரைய வேண்டும். 10 முதல் பிளஸ் 2 வரையி
லான மாணவர்கள், தமிழ்நாட்டு பண்பாட்டுடன் அருங்காட்சியகத்
தொடர்பு குரல் ஓவியம் அல்லது திருக்குறளுடன் அதற்கான பொரு
ளுடன் ஓவியம் வரைய வேண்டும்.
இதற்கான தாள்கள் அருங்காட்சியகத்தில் வழங்கப்படும். பென்சில்
கள், வண்ணங்கள் உள்ளிட்ட பொருள்களை மாணவர்களே கொண்டு
வர வேண்டும். வயதுக்கான அடையாள அட்டையை வைத்திருக்க
வேண்டும். கைப்பேசிகளுக்கு அனுமதியில்லை.
மின்னஞ்சலில் (govtmuse@tn.gov.in) மாணவர் பெயர், வகுப்பு,
பள்ளியின் பெயரைத் தெரிவித்து அனுப்ப வேண்டும். READ MORE👇
No comments:
Post a Comment