மழைக்காலத்துக்கு முன் வீட்டை பராமரியுங்கள்...! "Prepare Your Home Before the Rainy Season...!" - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, September 3, 2023

மழைக்காலத்துக்கு முன் வீட்டை பராமரியுங்கள்...! "Prepare Your Home Before the Rainy Season...!"

மழைக்காலத்துக்கு முன் வீட்டை பராமரியுங்கள்...! 

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர், வீட்டுப் பராமரிப்பில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன? என்பதை பார்க்கலாம். வீட்டின் கூரையில் தண்ணீர் கசிந்தபிறகு, அதைச் சீரமைத்துக்கொள்ளலாம் என்று காத்திருக்காமல், ஆண்டுக்கு 2 முறையாவது கூரையின் நிலையைச் சரிபார்த்துக்கொள்வது நல்லது. மாடியின் தரைத்தளத்தில் ஏதாவது விரிசல்கள் ஏற்பட்டிருந்தாலோ, தண்ணீர்க் கசிவுக்கான அறிகுறிகள் சுவரில் தெரிந்தாலோ அதை உடனடியாகச் சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை, வீடு கட்டி 20 ஆண்டுகளுக்கு மேலாகி இருந்தால், கட்டுமான கலைஞர்களை அழைத்து அதன் தரத்தைப் பரிசோதித்து கொள்ளவேண்டியது அவசியம். 

 கூரைகளில் நீர்ப் புகாமல் இருக்கும் தீர்வுகளை இப்போது பல 'பெயிண்ட்' நிறுவனங்கள் வழங்குகின்றன. வீட்டின் வடிகால் அமைப்பை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் ஒருமுறை முழுமையாகச் சரிபார்த்துவிடுவது பல பிரச்சினைகளைத் தடுக்கும். வீட்டின் வடிகால் குழாய்கள் சேதமாகியிருந்தால் அதை உடனடியாக மாற்றிவிடுவதும் மழைக்காலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்க உதவும். 

அத்துடன், வீட்டைச்சுற்றிப் போடப்படும் தேவையில்லாத குப்பைகள் வடிகால் தொட்டிகளில் சென்று சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். வீட்டின் வடிகால் அமைப்பைச் சீராக வைத்துக்கொண்டால் மழைக்காலத்தில் தொற்றுநோய்களின் கவலையில்லாமல் இருக்கலாம். வீட்டின் வெளிப்புற வேலைகளை முடித்த பிறகு வீட்டின் உட்கூரை பகுதிகளிலும், சுவர்களிலும் விரிசல்களோ, நீர்க் கசிவுகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பதைப் பரிசோதித்துப்பாருங்கள். 

அப்படி விரிசல் ஏதும் இருந்தால், அவற்றைச் சீர்செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். கதவுகள், ஜன்னல்களை சரியாக மூட முடிகிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்வதும் நல்லது. ஒருவேளை ஜன்னல்கள், கதவுகளின் தாழ்ப்பாள்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவற்றை மழைக்காலத்துக்கு முன் சரிசெய்துவிடுவது நல்லது. உங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் மரங்களில் காய்ந்து போன கிளைகள் இருந்தால், அவற்றை அகற்றிவிடுங்கள். இதனால், மழைக்காற்றின்போது மரக்கிளைகள் விழும் பாதிப்பை ஓரளவு தடுக்கலாம். 

உங்கள் வீட்டின் அடித்தளத்தில் ஏதாவது நிலவறைகள் இருந்தால், அவற்றை ஒருமுறை ஆய்வுசெய்துவிடுங்கள். உங்களுடைய வீடு தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் அமைந்திருந்தால், தண்ணீர் வீட்டுக்குள் வருவதைத் தடுக்க மணல் மூட்டைகளை வாங்கி வைத்துக்கொள்ளலாம். இந்த மணல் மூட்டைகளை வைத்து தண்ணீர் ஓரளவு வீட்டுக்குள் வராமல் தடுக்கலாம். இந்த எல்லா பராமரிப்புகளை விடவும் முக்கியமானது உங்கள் வீட்டைக் காப்பீடு செய்துவைப்பது. இதனால், மழைச்சேதங்கள் பெரியளவில் நம்மை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

"Prepare Your Home Before the Rainy Season...!" 

Before the rainy season begins, it's essential to pay attention to certain aspects of home maintenance. What are these crucial factors to consider? Let's take a look. Firstly, ensure that the drainage system around your house is clear and functional. It's advisable to clean the gutters at least twice a year, once before the onset of the rainy season and again after the monsoons. If your property has any low-lying areas prone to water accumulation, it's important to inspect them for signs of waterlogging or flooding. Taking immediate action to address these issues is essential. 

 If your house has been standing for over 20 years, it's advisable to call in professionals to assess its structural integrity and make necessary repairs. Nowadays, many companies offer solutions to prevent water seepage in walls during the rainy season. Conducting a comprehensive inspection of your home's exterior before the rainy season can help prevent many potential problems. If you have basement areas or crawl spaces in your home, inspect them for any cracks or signs of water infiltration. Properly sealing and waterproofing these areas can help keep your home dry during the rainy season. 

 Additionally, if you have any trees with overhanging branches near your home, trimming them before the rainy season can prevent leaves and debris from clogging your gutters. This, in turn, will help maintain proper water drainage. Inspect any roof vents or skylights for leaks and address them promptly. If you have any plants or shrubs against your home's exterior walls, consider trimming them to prevent water from seeping into your home. If there are any low-lying areas in your home's yard where water tends to collect, consider buying sandbags to divert water away from your home. All of these maintenance measures are crucial for protecting your home during the rainy season, helping you avoid potential water-related issues."

No comments:

Post a Comment