Pre Matric / Post Matric உள்ளிட்ட கல்வி உதவித்தொகை திட்டத்தை இணைய வழியில் சிறப்பாக செயல்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 600 006
ந.க.எண்.053862/எம்/இ4/2023, நாள். 19.09.2023
பொருள்:
பள்ளிக்கல்வி ஆதிதிராவிடர் நலம் - கல்வி உதவித் தொகை
2023-2024ஆம் ஆண்டிற்கு பெண் கல்வி ஊக்குவிப்புத்
திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், போஸ்ட்
மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், சுகாதாரமற்ற
தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்
தொகை திட்டம் இணைய வழியில் சிறப்பாக
செயல்படுத்துதல் - முன் நடவடிக்கை மேற்கொள்ளுதல் - சார்பு.
பார்வை: சென்னை-5, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரின்
கடிதம் ந.க.எண். ஜே2/15711/2023, நாள். 01.08.2023.
2023-2024ஆம் ஆண்டிற்கு பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்,
ப்ரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்
தொகை திட்டம் மற்றும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான
கல்வி உதவித் தொகை திட்டம் ஆகியவற்றை இணைய வழியில் சிறப்பாக
செயல்படுத்துதல்.. சார்ந்து கீழ்குறிப்பிட்ட அறிவுரைகளை பிற்பற்றி செயல்பட
தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு ஆதிதிராவிடர்
நலத்துறை இயக்குநர் அவர்கள் பார்வையில் கண்டுள்ள கடிதத்தில்
கோரப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 18 ஆம்
வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கான
பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம்
ரூ.50/- வீதம் 10 மாதங்களுக்கு ரூ.500/-ம், 6ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு
மாதம் ரூ.100/- வீதம் 10 மாதங்களுக்கு ரூ.1000/-ம், 7 முதல் 8ஆம் வகுப்பு வரை
பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.150/- வீதம் 10 மாதங்களுக்கு ரூ.1500/-ம்
வழங்கப்பட்டுவருகிறது.
மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையால் பள்ளிகள் அளவில் 9 மற்றும் 10ஆம்
வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு ப்ரிமெட்ரிக் கல்வி
உதவித்தொகை திட்டம், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான
போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும்1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களில் பெற்றோர்கள்
.யாரேனும் சுகாதார கேடு விளைவிக்கும் தொழில் புரிவோராக இருப்பின்
அம்மாணாக்கர்களுக்கான சுகாதார தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான
ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டமும் இன வேறுபாடின்றியும், வருமான
கணக்கின்றியும் செயல்படுத்தப்படுகிறது.
2023-2024ஆம் கல்வியாண்டு முதல் பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை
திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், போஸ்ட் மெட்ரிக் கல்வி
உதவித்தொகை திட்டம், சுதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான
கல்வி உதவித்தொகை திட்டம் ஆகிய திட்டங்கள் ஒருங்கிணைந்த கல்வி
உதவித்தொகை திட்டத்திற்கான புதிய இணைய தளத்தில்
செயல்படுத்தப்படவுள்ளது.
எனவே மேற்கண்ட கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ்
மாணாக்கர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக கீழ்கண்ட அறிவுரைகளை அனைத்து
பள்ளிகளும் தவறாமல் பின்பற்ற அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1) 2023-2024ஆம் கல்வியாண்டு முதல் பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை
திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், போஸ்ட் மெட்ரிக் கல்வி
உதவித்தொகை திட்டம், சுகாதாரமற்ற தொழில் புரிவோரின்
குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் விண்ணப்பிக்க ஆதார்
எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே மாணக்கரின் ஆதார் எண்ணுடன்
(ஏதேனும் தொலைபேசி எண் Mobile No) இணைக்கப்பட்டிருக்க வேண்டும் .
ஆகவே அனைத்து மாணாக்கர்களுக்கும் அவர்தம் ஆதார் எண்ணை
தொலைபேசி எண்ணுடன் இணைக்க அனைத்து பள்ளிகளும் நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
2) ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கே கல்வி
உதவித்தொகை (Aadhar Based Payment) விடுவிக்கப்படும் என்பதால்
ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கினை இணைக்கவும், seeding செய்யவும்,
தேவையான நேர்வுகளில் இந்திய அஞ்சல் துறையால் நடத்தப்படும் முகாம்
மூலம் அஞ்சலக வங்கியில் (India Portal Payment Bank) புதிய கணக்கினை
தொடங்கவும் அனைத்து பள்ளிகளும் நடடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
3) இளஞ்சிறார் மாணாக்கர்கள் வங்கி கணக்கு பெற்றோர் பெயருடன் இணைந்த
வங்கி கணக்காக (Joint Account) இருந்தாலும் அந்த வங்கி கணக்கினை
மாணவரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும்.
4) மாணாக்கர்களுக்கு ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க
ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில்,
முதன்மை வங்கி மேலார்கள், முதன்மை கல்வி அலுவர்கள், வட்டாரக் கல்வி அலுவர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் / தனித்த அலுவலர்களுடன்
கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
5) மாணாக்கர்களின் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு எண்
இணைக்கப்பட்டுள்ளதா
விவரத்தினை
என்ற
https://resident.uidai.gov.in/bank-mapper என்ற இணைய வழி மூலம்
உறுதி செய்து கொள்ள வேண்டும்.
6) மேற்கண்ட கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க
வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ் இணைய வழியில் பெறப்பட்டதாக
இருக்க வேண்டும்எனவே அனைத்து மாணாக்கர்களும் இணைய வழியி ல்
வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ் பெற்று வைத்திருப்பதை உறுதி செய்ய
வேண்டும்.
7) சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான உதவித்தொகை
திட்டத்தின் கீழ் 1ஆம் வகுப்பு முதலே பயிலும் மாணாக்கர்கள் விண்ணப்பிக்க
வேண்டியுள்ளதால் இக்கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பான
விழிப்புணர்வு மாணவர்களிடையே ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு
கூட்டங்கள் நடத்தப்படவேண்டும்.
8) சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான உதவித்தொகை
திட்டத்திற்கு, மாணக்கர்களின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் சுகாதாரமற்ற
தொழில் பரிவோராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை உரிய
சான்றின்படி சரிபார்ப்பு செய்ய வேண்டும்.
9) சுகாதாரமற்ற தொழில் புரிவதற்கான சான்றினை கிராமப்புறங்களில் கிராம
நிர்வாக அலுவலர் / ஊராட்சி மன்ற தலைவரிடமும், நகர்புறங்களில் சான்றிதழ்
வழங்கும் நிலையில் உள்ள நகராட்சி / மாநகராட்சி சுகாதார
ஆய்வாளர்களிடமும் பெற்றிருக்க வேண்டும்.
10)சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான உதவித்தொகை
திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது சுகாதாரமற்ற தொழில் புரிவதற்கான
சான்றினை மாணாக்கர்கள் கட்டாயம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய
வேண்டும்.
11) ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கான ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை
திட்டம் (9 மற்றும் 10) பேஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் (11
மற்றும் 12) கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க வருமான வரம்பு 2.50
இலட்சம்.
12)பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வருமான வரம்பு
இல்லை. அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர்
மாணவிகளாக இருக்க வேண்டும்.
13)சுகாதார தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை
திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வருமான வரம்பு, இன வேறுபாடு இல்லை.
ஆகவே 2023-2024ஆம் ஆண்டிற்கான மேற்கண்டுள்ள கல்வி
உதவித்தொகை திட்டங்கள் இணையவழியில் மேற்கொள்ளப்பட உள்ளதால்,
தங்களது மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலருடன் ஒருங்கிணைந்து
இத்திட்டத்தினை செயல்படுத்துமாறும், தங்கள் ஆளுகையின் கீழுள்ள அரசு /
அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இவ்வறிவுரைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பி,
உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தகுந்த
அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும்
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், 2023-2024ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிட மாணவர்களுக்கான
Pre-metric மற்றும் Post-metric கல்வி உதவித்தொகை பெற இணைய வழியே
விண்ணப்பிக்கும் போது மாணவர்களது சாதிச் சான்றிதழின் எண் மற்றும்
வருமானச் சான்றிதழின் எண்களை இணையவழி பதிவு செய்ய வேண்டும்
என்பதால் இக்கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாணவர்களிடமிருந்து
மேற்கண்டுள்ள விவரங்களை பெற்று பதிவு செய்ய தயார் நிலையில் இருக்குமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்டுள்ள சான்றுகள் தேவைப்படும்
மாணவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள அரசு e-சேவை மையம் மூலம்
விண்ணப்பித்திட உரிய அறிவுரைகள் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ரா.மு.
பள்ளிக் கல்வி இயக்குநருக்காக
பெறுநர்: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
No comments:
Post a Comment