கல்வி உதவித்தொகைக்கு இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் - பள்ளிக்கல்வித் துறை - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, September 21, 2023

கல்வி உதவித்தொகைக்கு இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் - பள்ளிக்கல்வித் துறை

கல்வி உதவித்தொகைக்கு இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் - பள்ளிக்கல்வித் துறை 

கல்வி உதவித்தொகைக்கு இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம், உயர்கல்வி உதவித் தொகைக்கான, ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் ஆகிய திட்டங்கள், பள்ளி மாணவ - மாணவியருக்கு அமலில் உள்ளன.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை மாணவர்கள் பெற, இனி ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

இதற்காக புதிய இணையதளம் துவங்கப்படும்.மேலும், மாணவ - மாணவியரின் பெயரிலான வங்கி கணக்குக்கே, கல்வி உதவித்தொகை அனுப்பப்படும். எனவே, மாணவ - மாணவியரின் கல்வி உதவித்தொகையை ஆன்லைனில் விண்ணப்பித்து பெற, தலைமை ஆசிரியர்கள் உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு, மாணவர்கள் அதற்கான ஆவணங்களை தயார்படுத்த அறிவுறுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி கூறியுள்ளார். 

The Department of School Education has announced that applications for scholarships can now be made online only. Girls Education Promotion Scheme, Higher Education Scholarship, Pre Matric Scholarship, Post Matric Scholarship Scheme, Educational Scholarship Scheme for Children of Unhealthy Workers are valid for school students. .

This scholarship is provided to the students studying from class III to Plus 2 in government and government aided schools. Students can now apply online only to get this scholarship. A new website will be launched for this purpose and the scholarship will be sent to the bank account in the name of the student. 

Therefore, the head teachers should make appropriate arrangements and instruct the students to prepare the relevant documents for the students to apply for the scholarship online, said the director of school education.

No comments:

Post a Comment