🟠திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : தவம்
குறள் :261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
🟠விளக்கம்:
தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.
🟠பழமொழி :
Cowards die many times before their death
வீரனுக்கு ஒரு முறை சாவு; கோழைக்கு தினந்தோறும் சாவு
🟠இரண்டொழுக்க பண்புகள் :
1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.
2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.
பொன்மொழி :
ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாம். அறிஞர் அண்ணா
🟠பொது அறிவு :
1. தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?
விடை: கோயமுத்தூர்
2. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்
விடை: மெலானின்
🟠English words & meanings :
mag·ne·to·sphere - A region surrounding a planet, star etc. Noun. Our solar system has magnetosphere around it. காந்த மண்டலம். பெயர்ச் சொல்.
🟠ஆரோக்ய வாழ்வு :
எள்: எள் அல்லது அதன் மூலம் தயாரிக்கப் படும் நல்லெண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
🟠செப்டம்பர் 15
அனைத்துலக சனநாயக நாள்
அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.
நீதிக்கதை
கெட்ட பழக்கங்களை ஆரம்பத்திலே அகற்று
ஒரு பணக்கார தொழிலதிபர் தனது மகனின் கெட்ட பழக்கங்களைக் கண்டு கவலைப்பட்டார். அவர் ஒரு வயதான ஞானியிடம் ஆலோசனை கேட்டார். முதியவர் அந்த மனிதனின் மகனைச் சந்திக்க அவரிடம் அழைத்து வரச் சொன்னார்.அவர்கள் காடுகளுக்குள் நடந்தார்கள், முதியவர் சிறுவனுக்கு ஒரு சிறிய மரக்கன்றைக் காட்டி அதை வெளியே இழுக்கச் சொன்னார். சிறுவன் அதை எளிதாகச் செய்தான், அவர்கள் நடந்தார்கள்.
முதியவர் சிறுவனிடம் ஒரு சிறிய செடியை பிடுங்கச் சொன்னார்.
சிறுவன் அதையும் கொஞ்சம் முயற்சி செய்து செய்தான்.
அவர்கள் நடந்து சென்றபோது, முதியவர் சிறுவனிடம் புதரை வெளியே இழுக்கச் சொன்னார், சிறுவன் அதை செய்தான். அடுத்தது ஒரு சிறிய மரம், அதை வெளியே இழுக்க சிறுவன் மிகவும் போராட வேண்டியிருந்ததுஇறுதியாக, முதியவர் ஒரு பெரிய மரத்தை சிறுவனிடம் காட்டி, அதை வெளியே இழுக்கச் சொன்னார். பலமுறை, வெவ்வேறு வழிகளில் முயற்சித்தும் சிறுவனால் அதை வெளியே எடுக்க முடியவில்லை. முதியவர் சிறுவனைப் பார்த்து புன்னகைத்து “பழக்க வழக்கங்களும் அப்படித்தான்” என்று கூறுனார். கெட்ட பழக்க வழக்கங்களை நாம் ஆரம்பத்திலே அகற்றி விட வேண்டும், அது பெரியதாக வளர்ந்து விட்டால் நம்மால் அகற்றுவது கடினமானது. நீதி: கெட்ட பழக்கங்கள் நம் அமைப்பில் குடியேறியவுடன் அவற்றை அகற்றுவது கடினம். ஆரமத்திலேயே அவற்றை அகற்றுவது நல்லது.
🟠இன்றைய செய்திகள்
15.09.2023
🔴சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக பதவி ஏற்றார் தர்மன் சண்முகரத்னம்.
🔴தமிழகத்தில் முதல் முறையாக மூன்று பெண்கள் அர்ச்சகர் ஆனார்கள். ஸ்ரீரங்க கோவிலில் உதவி அர்ச்சகர்களாக பயிற்சி.
🔴கடனை அடைத்த முப்பது நாட்களில் சொத்து பத்திரம் தராவிட்டால் நடவடிக்கை. வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ புதிய உத்தரவு.
🔴தமிழகத்தில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.
* சூறாவளியாக சுழன்றுடித்த பென் ஸ்டோக்ஸ் - மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி.
🔴உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு.
🟠Today's Headlines
🔴Dharman Shanmugaratnam took office as the ninth President of Singapore.
🔴Three women became priests for the first time in Tamil Nadu. Trained as Assistant Priests at Sriranga Temple.
🔴Action will be taken if the property bond is not provided within thirty days of payment of the loan. RBI New Directions for Banks and Financial Institutions
🔴30 people in Tamil Nadu have Dengu. Precautionary and preventory measures in full pledge.
🔴Ben Stokes spins like a whirlwind - England won the third ODI.
🔴Afghanistan Team Announced for world cup cricket.
🟠Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment